மார்ச் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு(International Space Station) பயணப்படுவதற்கு முன்பே நாசாவிடம் இந்த திரைப்படம் வெளியானவுடனேயே விண்வெளியில் பார்க்க விரும்புவதாக தன் கோரிக்கையை சொல்லியிருந்தார் அமெரிக்க விண்வெளி வீரர் மைக்கேல் பாராட்(Michael Barratt).அவர் கேட்டுக்கொண்டதை போலவே தயாரிப்பு நிறுவனத்தின் அனுமதியுடன் நாசா விஞ்ஞானிகள் மைக்கேலின் கோரிக்கையை நிறைவேற்றினர்.
அந்த திரைப்படம் தற்போது வெளிவந்து வசூலில் பட்டையை கிளப்பிகொண்டிருக்கும் ஸ்டார் ட்ரெக்(Star Trek) தான்.JJ Abraham இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை நாசா விஞ்ஞானிகள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அப்லோட் செய்ய,மைக்கேல் தன் சக விண்வெளி வீரர்களான ரஷ்ய படல்கா,ஜப்பானிய வகாடாவுடன் கணினி திரையில் பார்த்துள்ளார்.அவர் சிறுவயதில் தொலைக்காட்சியில் பார்த்த ஸ்டார் ட்ரெக் தொடர் தான்,விண்வெளி வீரராக வருவதற்கான ஊக்கத்தை தந்தாக சொல்கிறார் மைக்கேல்.
படம் தொடக்கம் முதல் முடிவு வரை வேகமென்றால் வேகம் ராக்கெட் வேகம்.தொழில்நுட்ப பிரிவுகளில் 2010 ஆஸ்கர் விருதுகளுக்கு போட்டியிட படம் இப்போதே தயார்.ஒரே வரியில் சொல்வதென்றால் இரண்டு மணி நேர கிளைமாக்ஸ்.படத்தின் விரிவான விமர்சனம் ஹாலிவுட் பாலா http://hollywoodbala.blogspot.com/2009/06/star-trek-2009.html பக்கத்தில்...
விண்வெளியில் பார்க்கப்பட்ட திரைப்படம்
Labels: சினிமா, தொழில்நுட்பம், ஹாலிவுட்
Subscribe to:
Post Comments (Atom)

4 comments:
//இரண்டு மணி நேர கிளைமாக்ஸ்//
1000% சரியான வார்த்தைகள். :)
எனக்கு பிடித்த ஒரே விண்வெளி சம்பந்தப்பட்ட படம் ஆர்மகெட்டான்..ப்ரூஸ் வில்லிஸ் நடித்த படம்
நன்றி பாலா.
கிரி, இந்த படத்தையும் பாருங்க. கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும்.
கிரி.. ஆர்மெகடனுக்கு கதை எழுதிய JJ Abram தான் இதன் இயக்குனர். அதைவிட 10 மடங்க அருமையான படம் இது.
Post a Comment