வீடியோ:மைக்கேல் ஜாக்சன்-மறக்கமுடியாத இசையும் நடனமும்

நான்கு நாட்கள் முன்பு மாலை 4:30 மணி அளவில் அலுவலக நண்பர் ஆண்ட்ரு ஸ்மித் தளர்ந்த முகத்துடன் "Prem! Michael Jackson is No more" என்று சொன்னபோது அலுவலக வேலை பார்த்து கொண்டே எனக்கு ஜாக்சன் பாடல்களில் மிக பிடித்த "In the Closet" கேட்டுக்கொண்டிருந்தேன்.ட்விட்டர் ஸ்தம்பித்தது போல் எனக்கும் ஆனது.

நான் வாழ்ந்த கிராமத்தில் இருந்து நகரத்திற்கு படிக்க வந்த போது பதின்ம வயதுகளில் என்னையும் துள்ள வைத்தது ஜாக்சனின் டேஞ்சரஸ்(Dangerous).ஒரு தலைமுறையையே கட்டிப்போட்டது மைக்கேலின் இசையும்,நடனமும்.

13 கிராமி விருதுகளுடன்(இதுவே ஒரு உலக சாதனையாம்)உலகமெங்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற மைக்கேல் சொந்த வாழ்வில் பல சிக்கல்களை,முரண்களை சந்தித்தாலும் தொழிலில் அசைக்க முடியாத ஆளுமை பெற்றிருந்தார்.அவருடைய இசை கச்சேரிகளுக்கு வரும் ஆயிரக்கணக்கான மக்கள்,அவரை நேரில் பார்த்ததுமே கண்ணீர் விட்டு உணர்ச்சி பெருக்குபவர்கள் என ஒரு பெரும் கூட்டத்தையே பல நாடுகளில் வசியப்படுத்தி வைத்திருந்தார்.

இந்த வீடியோ அதற்கு ஒரு சான்று.மைக்கேலின் "Greatest Hits" என்னும் வீடியோவில் மைக்கேல் உலக நாடுகளுக்கு இசை சுற்றுலா சென்றபோது மக்கள் ஆரவாரங்களின் தொகுப்பு.பின்னணியில் ஒலிப்பது மேற்கத்திய செவ்வியல்(Western Classical) இசை கலைஞர் கார்ல் ஆர்ஃப்(Carl Orff)பின், கார்மினா பியுரானா(Carmina Burana) இசைக்கோவையில் முக்கிய இசையான ஓ ஃ பார்ச்சுனா(O Fortuna).அந்த காலத்தில் Old Spice விளம்பரத்திலும் உபயோகித்திருப்பார்கள்.



இப்போது உயில் கூட எழுதி வைக்காமல் இறந்தாலும் இறந்தார்,அவர் செலவளித்தது போக மீதம் சொத்துகள் யாருக்கு என பெரும் போட்டியே நடந்து கொண்டிருப்பதாக சிஎன்என்னில் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

5 comments:

SurveySan said...

////பின்னணியில் ஒலிப்பது மேற்கத்திய செவ்வியல்(Western Classical) இசை கலைஞர் கார்ல் ஆர்ஃப்(Carl Orff)பின், கார்மினா பியுரானா(Carmina Burana) இசைக்கோவையில் முக்கிய இசையான ஓ ஃ பார்ச்சுனா(O Fortuna).அந்த காலத்தில் Old Spice விளம்பரத்திலும் உபயோகித்திருப்பார்கள்.////

vow! i was searching for this info for so long.
it used to be known as "the omen" music,because its used in that movie.

பிரேம்ஜி said...

வாங்க சர்வேசன்,

வருகைக்கு மிக்க நன்றி. பல படங்களில்,விளம்பரங்களில் இந்த இசையை உபயோகித்துள்ளார்கள்.

கிரி said...

மைக்கேல் ஜாக்சன் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு :-)

//பின்னணியில் ஒலிப்பது மேற்கத்திய செவ்வியல்(Western Classical) இசை கலைஞர் கார்ல் ஆர்ஃப்(Carl Orff)பின், கார்மினா பியுரானா(Carmina Burana) இசைக்கோவையில் முக்கிய இசையான ஓ ஃ பார்ச்சுனா(O Fortuna).அந்த காலத்தில் Old Spice விளம்பரத்திலும் உபயோகித்திருப்பார்கள்.//

தகவலுக்கு நன்றி பிரேம்ஜி. நம் உடலை முறுக்கேற்றும் இசை, இதன் ஒலி வடிவம் கிடைக்குமா? அருமையான இசை ..எனக்கு இது ரொம்ப பிடிக்கும்.

கிடைத்தால் தரவும்.. நன்றி

நானும் இந்த வீடியோ வை என் மைக்கேல் பற்றிய பதிவில் இணைத்து இருக்கிறேன்

கிரி said...

நானே தரவிறக்கம் செய்து விட்டேன் தகவலுக்கு நன்றி

http://kvasir.free.fr/musiques/orff_ofortuna.mp3

பிரேம்ஜி said...

வாங்க கிரி,

வருகைக்கும்,அந்த இசைக்கோப்பின் பகிர்வுக்கும் மிக்க நன்றி.