இதுவரை வெளிவராத இந்த வீடியோவை யுஎஸ் வீக்லி என்னும் பத்திரிக்கை தற்போது வெளியிட்டுள்ளது.வசூல் புரட்சி செய்த Thriller இசை ஆல்பம் வெளிவந்த அடுத்த வருடம் 1984 ஆம் ஆண்டு ஜனவரி 27 அன்று பெப்சி நிறுவனத்திற்காக ஒரு விளம்பர படப்பிடிப்பு நடந்துள்ளது.
இருபுறமும் பட்டாசுகள் வெடிக்க ஜாக்சன் படிகளில் இறங்கி வந்து நடனம் ஆடுவது போல் படப்பிடிப்பு.முதல் சில தடவைகள் படம் பிடிக்கப்பட்டு சரிவராததால் மீண்டும் ஆறாவது முறையாக படம் பிடிக்கப்பட்டபோது பட்டாசுகள் குறுப்பிட்ட நேரத்திற்கு முன்பே வெடித்து விட்டன.ஜாக்சனின் தலையிலும்,முகம்,உடலிலும் தீக்காயங்கள் ஏற்பட்டன.முதலில் தலையில் தீப்பிடித்து எரிந்தது சில வினாடிகள் பின்பே ஜாக்சனுக்கு தெரிந்தது.அதற்குள் பெரும்பாலான முடிங்கள் கருகி விட்டன.உடன் படப்பிடிப்பு குழுவினர் விரைந்து தீயை அணைத்து ஜாக்சனை மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர்.இந்த விபத்து காரணமாக பல முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவேண்டி வந்தது.அதற்காக வலி நிவாரணிகளை அதிக அளவு எடுத்து பின்னர் அதற்கே அடிமையாகும் நிலை ஏற்பட்டது.இதுவரை ஒன்றிரெண்டு புகைப்படங்கள் மட்டுமே இந்த விபத்து பற்றி வெளிவந்துள்ளது.இப்போது தான் முதன் முறையாக இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.பெப்சி நிறுவனம் நஷ்ட ஈடாக 1.5 மில்லியன் டாலர்களை ஜாக்சனுக்கு கொடுத்தது.அதை அப்படியே தொண்டு நிறுவனத்திற்கு அவர் கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
http://news.yahoo.com/s/ap/20090716/ap_on_en_mu/us_michael_jackson_accident_video
வீடியோ:மைக்கேல் ஜாக்சனின் பெப்சி விளம்பர தீவிபத்து
Labels: நிகழ்வுகள், மைக்கேல் ஜாக்சன், வீடியோ
Subscribe to:
Post Comments (Atom)

6 comments:
பகிர்விற்கு நன்றி பிரேம்ஜி
இந்த விபத்து மட்டும் நடக்கவில்லை என்றால் அவரது வாழ்க்கை முறையே மாறி இருக்கும்..
பிளாஸ்டிக் சர்ஜரி என்ற ஒன்று வரமாலே போய் இருக்க வாய்ப்புண்டு..
வருத்தமளிக்கும் நிகழ்ச்சி
கிரி,
நீங்கள் சொல்வது மிக சரியே.
சில உண்மைகள் உறங்கி விழித்தெழுகின்றன.
ஜி சார் நம்ம பக்கம் வாறதில்லையா????
பாவம்... கஷ்டமாக இருக்கிறது
வருகைக்கு மிக்க நன்றி. நடராஜன் அவர்களே.
வாங்க பிரபா, அருமையா கவிதைகள் எழுதுறீங்க.
மிக வருத்தமான நிகழ்வு தான் சரவண குமரன்.
Post a Comment