அசத்தியிருக்கிறார் தியரி லுகோ(Theirry Legault).இதுவரை இதுபோன்ற படங்கள் எடுக்கப்பட்டதில்லை.கீழேயுள்ள படத்தில் இரு சிறிய புள்ளிகள் தெரிகின்றதா?அவை என்ன?சற்றே பெரிய புள்ளி தான் அட்லாண்டிஸ் விண்கலம்.அதற்கடுத்த சிறிய புள்ளி?அது ஹப்பிள் தொலை நோக்கி.கடந்த மே மாதம் 13 ஆம் தேதி விண்வெளியில் உள்ள ஹப்பிள் தொலைநோக்கியின் பழுதை சரிபார்க்க விண்வெளி வீரர்கள் அட்லாண்டிஸ் விண்கலத்தில் சென்றனர்.அட்லாண்டிஸ் விண்கலம் ஹப்பிள் தொலைநோக்கியை நெருங்கும் போது தியரி இந்த ஒளிப்படங்களை ப்ளோரிடாவிலிருந்து எடுத்துள்ளார்.
கேனான் 5D Mark II கேமரா,13 செமீ தொலைநோக்கி,சோலார் ப்ரிசம் கொண்டு, அட்லாண்டிஸ் ஹப்பிள் தொலை நோக்கியை நெருங்கும் நேரத்தை துல்லியமாய் கணக்கிட்டு படங்களை எடுத்துள்ளார்.படங்களை பெரிதாக்கவும்,மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளவும் படங்களின் மீது சொடுக்கவும்.





6 comments:
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
இவ்வரிய படங்களைப் பார்த்துப் பகிர்ந்தமைக்கு நன்றி!
இவ்வளவு சிறிய கருவியாலா??இவ்வளவு துல்லியமான படங்கள்!
அப்பப்பா சாதனை ;முயற்சி; திறமை என்பது இவை தானோ???
தொடர்பான தொடுப்பைத் தந்தது மிகப் பயனாக இருந்தது.
நன்றி
பிரேம்ஜி ஒண்ணும் புரியலையே
சூரியன் பக்கம் எப்படி இவ்வளோ நெருக்கமாக போக முடியும்....இல்ல இந்த விண்கலம் ரொம்ப தொலைவில் இருக்கா!
படம் ஆனா ரொம்ப தெளிவா இருக்கு.... சூரியன் சிகப்பா தான் எல்லா படத்திலையும் பார்த்து இருக்கேன்..இதில மஞ்சள் கலராக இருக்கு (கலைஞர் மாறியதாலா ;-) )
நன்றி செய்திவளையம். அவ்வாறே செய்கிறோம்.
வருகைக்கு மிக்க நன்றி யோகன் பாரிஸ்.
வாங்க கிரி,
கிரிக்கெட் மேட்ச் டிவியில ஒளிபரப்பாகையில் பீல்டர்களை மிட்
சாட்டில் முகம் தெரிய காட்டும் போது பின்னால் பார்வையாளர்கள் கேலரியில் மிக அருகே உட்கார்ந்திருப்பது போல் தெரியும். ஆனால் உண்மையில் அவர்கள் மிக மிக தூரத்தில் அமர்ந்திருப்பார்கள்.கிட்டத்தட்ட அந்த மாதிரி ஒரு காட்சி தான் இதுவும். இரு பரிமாணங்களில் காட்சிப்படுத்தப்படும் போது நமக்கு தோன்றுவது இது.
ஹைய்யோ!!!!!
நன்றிப்பா.
வருகைக்கு மிக்க நன்றி துளசி மேடம்.
Post a Comment