வீடியோ: நயாகரா நீர்வீழ்ச்சி அதி துல்லியமாக

இது அமெரிக்காவில் நயாகரா சீசன் நேரம்.மே மாதம் துவங்கி செப்டம்பர் வரை படு சுறுசுறுப்பாக சீசன் களை கட்டும்.

அமெரிக்கா மற்றும் கனேடிய எல்லைகளுக்கு நடுவில் ஓடும் நயாகரா நதியில் பாதி தொலைவில் உள்ளது நயாகரா நீர்வீழ்ச்சி.நீர்வீழ்ச்சியின் ஒரு புறம் அமெரிக்கா,மற்றொரு புறம் கனடா.மூன்று முக்கிய நீர்வீழ்ச்சிகளை கொண்டது.பெரியது மற்றும் முக்கியமானது ஹார்ஸ் ஷூ(Horse Shoe Falls) அல்லது குதிரை லாட நீர்வீழ்ச்சி கனடாவில் உள்ளது.அடுத்தது அமெரிக்கன் நீர் வீழ்ச்சி மற்றும் சிறிய ப்ரைடல் வேய்ல் நீர்வீழ்ச்சி.உயரம் அதிகம் இல்லாவிட்டாலும் ஹார்ஸ் ஷூ நீர்வீழ்ச்சி 762 மீ அகலம் கொண்டது.படு பிரம்மாண்டமானது.அமெரிக்கன் நீர்வீழ்ச்சி 55 மீ உயரமும், 305 மீ அகலமும் கொண்டது. நயாகராவில் ஒவ்வொரு நிமிடமும் ஆறு மில்லியன் கன அடிக்கு அதிகமான நீர் வீழ்கிறது.இவ்வளவு நீர்வீழ்வு நயாகராவை ஒரு மகா நீர்வீழ்ச்சி ஆக்குகிறது.

(குறைந்த வேக இணைய இணைப்பை கொண்ட நண்பர்கள் Play செய்து சற்று காத்திருந்தால் அதி துல்லிய வீடியோவை காணலாம்).



http://www.youtube.com/watch?v=5c5s-Uzys5w

5 comments:

seidhivalaiyam.in said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

கிரி said...

அசத்தல்

பிரேம்ஜி said...

நன்றி செய்திவளையம்

நன்றி கிரி.

ummar said...

ஒரு அற்ப்புதமான கான வைத்து அசத்தி விட்டீர்கள்

பிரேம்ஜி said...

மிக்க நன்றி உம்மர்.