ஒரு வீடியோ ஃபைலை DVD ஆக மாற்ற

டிவிடியிலிருந்து வீடியோ ஃபைலாக மாற்ற பல மென்பொருட்கள் உண்டு.ஆனால் ஒரு வீடியோ ஃபைலை டிவிடி வடிவத்திற்கு மாற்ற சில மென்பொருட்களே உள்ளன.அவையும் இலவச மென்பொருட்கள் அல்ல.DVD Flick இந்த வேலைக்கு சிறப்பான மென்பொருள்.தனி ஒரு வீடியோ ஃபைலை,அவை AVI/MPG/MOV/WMV/MP4 என எந்த வடிவில் இருந்தாலும்,அவற்றை டிவிடிகளுக்கு ஏற்ற mpeg-2 வடிவத்திற்கு encode செய்து பின்னர் டிவிடிக்களில் பதிவு செய்கிறது.

DVD Flick ஐ தரவிறக்க.

http://www.dvdflick.net/download.php



அதை நிறுவிய பிறகு Project Settings இல் சென்று General பகுதியில் Encoder ஐ High என மாற்றவும்.


video பகுதியில் Encoding ஐ Fastest என மாற்றவும்.(இவ்வாறு அதிவேகமாக மாற்றினால், encode செய்யம்போது கணினியில் இயக்கம் மிக மெதுவாக இருக்கும்.உங்கள் தேவைக்கேற்றபடி Fast என்றோ Normal என்றோ வைத்துக் கொள்ளலாம்)


Burning பகுதியில் Burn project to disc என்ற பெட்டியை டிக் செய்து Accept ஐ சொடுக்கவும்.


encode செய்யப்ப்பட்ட வீடியோ கீழே உள்ள நாம் தேர்ந்தெடுக்கும் Project destination folder இல் VIDEO_TS,AUDIO_TS ஆகவும் மாற்றப்பட்டு சேமிக்கப்பட்டிருக்கும்.நாம் encode செய்வதற்கு முன்பே ஒரு புதிய பதிவு செய்யப்படாத டிவிடியை டிவிடி ரைட்டரில் செலுத்திவிட்டால்,encode செய்து முடித்தவுடன் தானாக டிவிடியை எழுதிவிடும்.அல்லது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு ஒரு Rewritable டிவிடியாக இருந்தால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டதை அழித்துவிட்டு பதிவு செய்யும்.

பின்னர் Add title சென்று டிவிடி ஆக்கப்பட வேண்டிய வீடியோ பைலை தேர்வு செய்து Create DVD என்னும் பொத்தானை சொடுக்கவும். அவ்வளவே.

14 comments:

சென்ஷி said...

பகிர்விற்கு மிக்க நன்றி நண்பரே!

MPG/MOV/WMV/MP4 வடிவங்களை AVI ஃபார்மேட்டில் மாற்ற இலவச மென்பொருள் கிடைக்குமா? நான் தேடிப்பார்த்த வகையில் எல்லாமே 2 நிமிடங்களுக்கு மேல் ஓடாத வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளவனாக உள்ளன :(

பிரேம்ஜி said...

வருகைக்கு மிக்க சென்ஷி.

//MPG/MOV/WMV/MP4 வடிவங்களை AVI ஃபார்மேட்டில் மாற்ற இலவச மென்பொருள் கிடைக்குமா? நான் தேடிப்பார்த்த வகையில் எல்லாமே 2 நிமிடங்களுக்கு மேல் ஓடாத வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளவனாக உள்ளன :(//

இருக்கிறது சென்ஷி அவர்களே. இதற்காகவே சிறப்பானதொரு மென்பொருள் உண்டு.அதுவும் இலவசமாக.பெயர்- Format Factory.மேலதிக விவரங்களுக்கு இந்த பதிவை பார்க்கவும்.
http://www.premkg.com/2009/07/video-converter.html

சுரேஷ் கண்ணன் said...

சில சந்தேகங்கள்.

700 mb கோப்பை dvd-ஆக மாற்ற எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறது? படத்தின் resolution-ல் எந்த பாதிப்பும் ஏற்படுவதி்ல்லையா? மெனு செட்டிங்க்ஸ் அமைக்க எளிதாக இருக்கிறதா?

பிரேம்ஜி said...

உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி சுரேஷ் கண்ணன் அவர்களே.

//700 mb கோப்பை dvd-ஆக மாற்ற எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறது? படத்தின் resolution-ல் எந்த பாதிப்பும் ஏற்படுவதி்ல்லையா? மெனு செட்டிங்க்ஸ் அமைக்க எளிதாக இருக்கிறதா//

700mb கோப்பை டிவிடி ஆக மாற்ற ஒரு மணி நேரம் முதல் ஒன்றே கால் மணி நேரம் வரை ஆகிறது. இது சற்றே அதிக நேரம் போல தோன்றினாலும் இந்த வடிவ மாற்றத்திற்கு இலவச மென்பொருள் கிடைப்பது மிக அரிது என்பதால் ஏற்றுக்கொள்ளவேண்டியுள்ளது.

படத்தில் resolution இல் எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை.உலக திரைப்படங்களை நான் இவ்வாறே 700mb கோப்புகளிலிருந்து டிவிடி ஆக மாற்றி தொலைக்காட்சி பெட்டியில் பார்ப்பது வழக்கம்.மெனு செட்டிங்க்ஸ் அமைப்பது மிக எளிமையானது.

சுரேஷ் கண்ணன் said...

பதிலுக்கு நன்றி பிரேம்ஜி. நான் முன்னர் Total video எனும் மென்பொருளை உபயோகப்படுத்திக் கொண்டிருந்தேன். ஆனால் அது அதிக நேரம் எடுத்தது. ஆனால் இப்போதெல்லாம் அப்படியே data வாக சேமித்து கணினியிலோ டிவிடி பிளேயரின் மூலமோ பார்க்கிறேன். இதனால் ஒரு குறுந்தகட்டில் ஐந்து அல்லது ஆறு படங்களைக் கூட பதிய முடிகிறது. :-)

seidhivalaiyam.in said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

இனியன் said...
This post has been removed by the author.
இனியன் said...

அய்யா!"ஒரு வீடியோ ஃபைலை DVD ஆக மாற்ற"... படித்தேன்.படத்தோடு விளக்கியமைக்கு நன்றி.ஆனால், Encoder priyarity ல் High என்பதே இல்லை.மற்றும் Burninging ல் burn project to disk என்பதில் tick ஏற்படுத்த முடியவில்லை create iso image என்பது மட்டுமே tick செய்ய ஏதுவாக உள்ளது.இவற்றை சரி செய்ய வழி சொல்லவும்.

பிரேம்ஜி said...

வருகைக்கு மிக்க நன்றி இனியன்.

நீங்கள் கூறும் பிழையை எனது கணினியில் ஏற்படுத்தி பார்க்க இயலவில்லை.எனவே
கீழ்காணும் வழிமுறைகளை செய்து பாருங்கள்.
கணினியை ரீபூட் செய்யவும்.
DVD Flick மென்பொருளை Uninstall செய்துவிட்டு மீண்டும் ஒரு முறை நிறுவவும்.
உங்கள் டிவிடி டிரைவ் சரியாக உள்ளதா என ஒரு முறை சோதித்து விடவும்.

அப்போதும் சரிவரவில்லை வேறு வழியே இல்லையென்றால் நீங்கள் encode செய்யும் படம் AUDIO_TS,VIDEO_TS என இரு ஃபோல்டர்களில் Project Destination Folder இல் சேமிக்கப்பட்டிருக்கும். நீங்கள் DVD Flick நிறுவியுள்ள Program Files பகுதியில் உள்ளே imgburn என்னும் ஃபோல்டர் இருக்கும்.அதனுள்ளே imgburn.exe என்னும் செயலியை சொடுக்கவும். இந்த மென்பொருளை வைத்து எளிதாக டிவிடியில் எழுதி விடலாம். இந்த imgburn மென்பொருளில் Write files/folders to disc என்பதைசொடுக்கவும்.தேவையான போல்டர் களை தேர்வு செய்து Burn செய்யவும்.

novelist olerzor said...

நண்பரே,
பழைய கருப்பு வெள்ளை திரைப்படங்களை வண்ண திரைப்படங்களாக மாற்ற இலவச வீடியோ மென்பொருட்கள் உள்ளனவா? இருந்தால் அதைப்பற்றி தெரிவிக்கவும்.

அன்புடன் எழுத்தாளர் ஒளிர்ஞர்

பிரேம்ஜி said...

வணக்கம் எழுத்தாளர் ஒளிர்ஞர் அவர்களே,

பழைய கருப்பு வெள்ளை படங்களை வண்ண படங்களாக மாற்ற இலவச மென்பொருட்கள் நான் தேடி பார்த்த வரையில் இல்லை.அது சற்றே கடினமான செயலும் கூட.Adobe After Effects எனும் மென்பொருள் மூலம் அவ்வாறு செய்யலாம்.ஆனால் இது விலை கொடுத்து வாங்க கூடியது.மிகவும் விலை அதிகமுள்ள மென்பொருள்.இந்த மென்பொருள் மூலம் கணினி வரைகலை நன்கு கற்றவர்கள் கருப்பு வெள்ளை திரைப்படங்களை வண்ண படமாக மாற்றலாம்.இந்த உரலில் எவ்வாறு செய்வது என்று கூறுகிறார்கள்.
http://www.cgarena.com/freestuff/tutorials/ae/bwtocolor/bwtocolor.html

buruhaniibrahim said...

வண‌க்கம் தம்பி 2 கி பி இல் உள்ள எம்.பி.ஜி வீடியோவை ஒரு டி.வி.டி
சிடியில் பதிய‌ இந்த டிவிடி பில்க்கறால் முடியுமா?

buruhaniibrahim said...

வண‌க்கம் தம்பி 2 கி பி இல் உள்ள எம்.பி.ஜி வீடியோவை ஒரு டி.வி.டி
சிடியில் பதிய‌ இந்த டிவிடி பில்க்கறால் முடியுமா?

பிரேம்ஜி said...

வணக்கம் இப்ராஹிம் அவர்களே,

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.2 ஜிபி கொள்ளளவு உள்ள எம்பிஜி வீடியோவை நிச்சயம் ஒரு டிவிடியில் பதிய வைக்க முடியும்.