

மனோஜ் நைட் ஷ்யாமளன்(Manoj Night Shyamalan)அடுத்த படத்தை இயக்க துவங்கி விட்டார்.இம்முறை Nickelodeon தொலைக்காட்சியில் மிக புகழ் பெற்ற Avatar: The Last Airbender என்னும் அனிமேஷன் தொடரை திரைப்படமாக்குகிறார்.
தற்காப்பு கலைகள்,மாயஜாலம் கலந்து அமைந்த குறிப்பாக பதின்ம வயதினரை குறி வைத்து எடுக்கப்படும் இந்த கதையின் நாயகன் 12 வயது ஆங்(Aang).உலகை அழிக்க நினைக்கும் Firelord ஐ தன் நண்பர்கள் சொக்கா(Sokka),கடாரா(Katara)துணையுடன் எதிர்க்கிறான்.அதற்கு நீர்(Waterbending),நிலம்(Earthbending),நெருப்பு(Firebending)ஆகிய சக்திகளின் ஸ்டைலில் தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ளவேண்டும்.பிறப்பால் Airbender(காற்று)ஆன ஆங் மட்டும் தான் இந்த நான்கு தற்காப்பு கலை வடிவங்களையும் கற்க முடியும்.கற்று எவ்வாறு Firelord ஐ தன் நண்பர்கள் துணையோடு வெல்கிறான் என்பதே கதை.
Noah Ringer ஆங் ஆக நடிக்க,ஸ்லம்டாக் மில்லியனர் நாயகன் தேவ் படேலும் இந்த படத்தில் நடிக்கிறார்.இது கண்டிப்பாக இது ஒரு பொழுது போக்கு படமாக இருக்கும் என்கிறார் ஷ்யாமளன்.சிறிய திரை முன்னோட்டமும் வெளியாகியுள்ளது.
மனோஜ் நைட் ஷ்யாமளனின் The Last Airbender
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
Thirai munnottam arumai. Nandri!
வருகைக்கு மிக்க நன்றி செந்தில்.
Post a Comment