Sherlock Holmes: ஹாலிவுட் திரைப்பட முன்னோட்டம்


ஆர்தர் கானன் டாயில்(Arthur Conan Doyle)உருவாக்கிய கற்பனை கதாபாத்திரமான ஷெர்லக் ஹோம்ஸ்(Sherlock Holmes)துப்பறியும் கதைகள் இன்றும் உலகெங்கும் படிக்கப்படுகின்றன.

இதுவரை தொலைக்காட்சி நாடகங்களாகவும்,சிறிய அளவில் திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்ட ஷெர்லக் ஹோம்ஸ் முதன் முறையாக ஒரு முழு ஹாலிவுட் தயாரிப்பாக வெளிவரவுள்ளது.

இங்கிலாந்தை அழிக்க நினைக்கும் லார்ட் ப்ளாக்வுட்டை(Lord Blackwood)சிறைக்கு அனுப்புகிறார் ஷெர்லக் ஹோல்ம்ஸ்.சிறையில் ஷெர்லக்கை பார்வையாளராக வரவழைத்து பேசும் லார்ட் ப்ளாக்வுட்,நிச்சயம் சிறையிலிருந்து வெளிவந்து ஷெர்லக்கை பழி வாங்கப்போவதாக சபதம் செய்வது படத்தின் முதல் கட்ட காட்சிகளாக அமையப்போகின்றன.


ஷெர்லக் ஹோம்ஸ் கதாபாத்திரத்தில் ராபர்ட் டோவ்னி(Robert Downey Jr)யும்,ஷெர்லக்கின் நண்பரான டாக்டர் வாட்சன்(Dr.Watson)கதாபாத்திரத்தில் ஜுட் லா(Jude Law)வும் நடிக்கின்றனர்.முக்கியமாக இது கை ரிட்சி(Guy Ritchie)இயக்கும் திரைப்படம்.அதற்காகவே இந்த திரைப்படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன்.

0 comments: