ஜிமெயில் கணக்கை உபயோகித்து கொண்டிருக்கும் போது ஏதேனும் விவரங்களை விக்கிபீடியாவில் தேட நேர்ந்தால்,அந்த உலாவியின் விண்டோவை விட்டு வெளியே வந்து புதியதாக உலாவியின் விண்டோ திறந்து விக்கிபீடியா தளத்திற்கு செல்வதற்கு பதிலாக தற்போது கூகிளே ஜிமெயிலின் உள்ளே விக்கிபீடியா தேடலுக்கான இணைப்பை கொடுக்கிறது.ஜிமெயிலின் உள்ளே நுழைந்து மேலே Settings அருகே உள்ள பச்சை நிற ஆய்வு குடுவையை சொடுக்கவும்.தற்போது Gmail Labs உள்ளே வந்து விட்டீர்கள்.அங்கே Add any gadget by URL என்ற சிறப்பம்சத்தை Enable செய்யவும்.அந்த பக்கத்தின் கீழே உள்ள "Save Changes" சொடுக்கி மாற்றத்தை சேமிக்கவும்.
பின்னர் அதே கூகிள் Settings பகுதியில் Labs க்கு அருகிலுள்ள Gadgets என்னும் பகுதிக்கு வரவும். அங்கே Add a gadget by its URL என்னுமிடத்தில் கீழ்காணும் உரலை கொடுத்து Add பொத்தானை சொடுக்கவும்.http://www.google.com/ig/modules/wikipedia.xml

இனி ஜிமெயில் பக்கத்தின் இடது புறம் விக்கிபீடியா தேடலுக்கான உள்ளிடும் பெட்டி காணப்படும்.ஜிமெயிலின் உள்ளே விக்கிபீடியா தேடலை உபயோகிக்கலாம்.
ஜிமெயிலின் உள்ளேயே விக்கிபீடியா தேடல்
Labels: இணையம், ஜிமெயில், விக்கிபீடியா
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment