யூடியுப் தளத்தில் பார்க்கும் வீடியோவில் வரும் பாடலையோ அல்லது உரையாடைலையோ தனியே mp3 ஆக மாற்ற உதவுகிறது இந்த டிர்பி(Dirpy) தளம்.இது போல் வேறு சில தளங்களும்,மென்பொருட்களும் இருந்தாலும் இந்த டிர்பி தளம் மேலும் சில சிறப்பம்சங்களை கொண்டது.நமக்கு வேண்டிய பாடல்களை இதனுள்ளே அமைந்துள்ள யூடியுப் தேடு பொறியின் மூலம் தேடி தேர்ந்தெடுக்கலாம் அல்லது யூ டியுப் யூஆர்எல்(URL)தெரியும் பட்சத்தில் அதனை நேரடியாக உள்ளிடலாம்.
நமக்கு தேவையான நேர அளவை தேர்ந்தெடுத்து அந்த நேர இடைவெளியில், உதாரணத்திற்கு ஒரு வீடியோவின் இரண்டாம் நிமிடத்திலிருந்து மூன்றாம் நிமிடம் வரை வரும் இசையை மட்டும் அப்படியே பிரித்தெடுக்கலாம்.இவ்வாறு ஒலியை மட்டும் பிரித்து mp3ஃபைல் ஆக சேமித்து கொள்ளலாம்.சேமிக்கும் முன்னர் நமக்கு தேவையான பெயரை கொடுக்கலாம்.மேலும் ஒரு mp3 வடிவ பாடலுக்கு ID3 Tag Data கொடுக்கலாம்.இவை மட்டுமல்லாது அந்த வீடியோவையும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.தளத்திற்கு செல்லhttp://www.dirpy.com
யூடியுப் வீடியோவை mp3 ஆக மாற்ற
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
கணடிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி கிரி.
Post a Comment