மைக்ரோசாஃப்ட் பிங்கின் விஷுவல் செர்ச்(Visual Search)

ஒரு குறிப்பிட்ட செல்பேசியின் வடிவமைப்பு எப்படி இருக்கும் என உங்களுக்கு தெரிகிறது ஆனால் எந்த நிறுவனத்தினுடையது,பெயர் எதுவும் தெரியவில்லை.ஒரு புகழ்பெற்ற நடிகர் முகம் எப்படி இருக்கும் என உங்களுக்கு தெரிகிறது.ஆனால் அவர் பெயர் நினைவுக்கு வர மறுக்கிறது.உலக புகழ் பெற்ற ஒரு நகரத்தின் படம் உங்கள் நினைவுக்கு வந்து அந்த இடத்தின் பெயர் தெரியவில்லை.இது போன்ற சந்தர்ப்பங்களில் உதவ மைக்ரோசாப்ட் இன்று முதல் தனது பிங்(Bing)தேடுபொறி தளத்தில் விஷுவல் செர்ச்(Visual Search)எனும் புதிய தேடுபொறி(Search Engine)வசதியை அறிமுகப்படுத்துகிறது.


டிஜிட்டல் கேமரா, செல்பேசி, தொலைக்காட்சி பெட்டி, நகரங்கள், திரைப்படங்கள்,புகழ்பெற்றவர்கள்,கார்கள்,புலிட்சர்(Pulitzer)பரிசு பெற்ற புத்தகங்கள்,யோகாசன நிலைகள், புகழ் பெற்ற புத்தகங்கள் என பல்வேறுபட்ட தலைப்புகளில் ஏதேனும் ஒன்றை சொடுக்கினால் ஏராளமான படங்களை சித்திர அடுக்குகளாக காட்டுகிறது.தற்போதைக்கு பீட்டா பதிப்பாக இருக்கும் இந்த விஷுவல் செர்ச் விரிவுபடுத்தப்படும் போது மேலும் பல வசதிகள் இடம் பெறலாம்.


இந்த தளத்தை பயன்படுத்த மைக்ரோசாப்ட்டின் சில்வர் லைட்(Silver Light) மென்பொருளை நிறுவியிருக்க வேண்டும்.இல்லையெனில் தளத்தை பயன்படுத்தும் போது அதுவே நிறுவ உதவும்.


பிங் தொடர்ந்து புதிது புதிதாக பல்வேறு வசதிகளை கொடுத்து கூகிளுடன் போட்டியிடுகிறது. இந்த விஷுவல் செர்ச் இப்போதைக்கு தேடுபொறிகளில் பெரும் மாற்றத்தை உடனே உருவாக்காவிட்டாலும் கூகிளில் இல்லாத வசதியை கொண்டுள்ளது என்பது மட்டுமே இதன் தனித்துவம்.பிங் விஷுவல் செர்ச் தளத்திற்கு செல்ல

http://www.bing.com/visualsearch

6 comments:

ஹாலிவுட் பாலா said...

என்னென்னமோ.. சொல்றீங்க! :)

கேட்டுக்கறோம்! :) :)

பிரேம்ஜி said...

//என்னென்னமோ.. சொல்றீங்க! :)

கேட்டுக்கறோம்! :) :)//

:-))))))

Mãstän said...

நல்ல தகவல் பிரேம்ஜி.

பிரேம்ஜி said...

Mãstän,

மிக்க நன்றி.

தமிழ் said...

ஒரு மாதகாலம் இலவசமக உங்கள் விளம்பரங்களை எமது வலைத்தளத்தில் பிரசுரிக்க இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய குறிப்பு : முதல் ஒரு மாதகாலம் மட்டுமே இங்கு இலவசமாக விளம்பரம் செய்யலாம் பிறகு இந்த இந்த வலைத்தளத்தில் விளம்பரம் செய்ய பணம் கொடுக்க வேண்டும்


ஒரு மாதத்திற்கான விளம்பர தொகை : £3.00பணம் கொடுத்து விளம்பரம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

யாத்ரீகன் said...

>>>ஒரு குறிப்பிட்ட செல்பேசியின் வடிவமைப்பு எப்படி இருக்கும் என உங்களுக்கு தெரிகிறது ஆனால் எந்த நிறுவனத்தினுடையது,பெயர் எதுவும் தெரியவில்லை.ஒரு புகழ்பெற்ற நடிகர் முகம் எப்படி இருக்கும் என உங்களுக்கு தெரிகிறது.ஆனால் அவர் பெயர் நினைவுக்கு வர மறுக்கிறது.உலக புகழ் பெற்ற ஒரு நகரத்தின் படம் உங்கள் நினைவுக்கு வந்து அந்த இடத்தின் பெயர் தெரியவில்லை.<<

ஒரு புகைப்படத்தை upload செய்து அதன் மூலம் தேடலாம் என நினைத்தால் அப்படி இல்லையா ?! இதற்கும் இமேஜ் செர்ச்சுக்கும் என்ன வித்தியாசம் ?