எம்எஸ் ஆஃபீஸில் Tab உபயோகிக்க ஒரு மென்பொருள்


நவீன இணைய உலாவிகளில்(Browser) தற்போதுள்ள உள்ள Tab Browsing மிக முக்கியமான,உபயோகமுள்ள வசதியாக உள்ளது.வெவ்வேறு தளங்களை அடுத்தடுத்து உலாவ புதிய விண்டோக்களை திறக்க தேவையில்லாமல் ஒரே ஒரு இணைய உலாவி விண்டோவில் Tab மூலம் பல்வேறு இணைய பக்கங்களை திறக்க முடியும்.இணைய உலாவியை போல் நாம் அடிக்கடி உபயோகிக்கும் மற்றொரு மென்பொருள் தொகுப்பு எம்எஸ் ஆஃபீஸ்(MS Office).

ஒரு வேர்ட் டாகுமெண்டை எழுதி முடித்து சேமித்த பின் மற்றொரு வேர்ட் டாகுமெண்டை எழுத மற்றுமொரு வேர்ட் விண்டோ தேவைப்படுகிறது.அதிக அளவில் எம்எஸ் ஆஃபீஸ் டாகுமெண்ட்களை உபயோகிக்கும் போது இது சற்று சிரமமாகவே இருக்கும்.ஒவ்வொரு ஆபீஸ் டாகுமெண்டையும் ஒவ்வொரு விண்டோவாக திறப்பதற்கு பதில் தற்போதுள்ள பிரவுசர்கள் போல் MS Word,MS Excel,MS Power Point மென்பொருட்களை உபயோகிக்க இந்த சிறிய Add-on மென்பொருளான Office Tab பயன்படுகிறது.இது ஒரு இலவச மென்பொருள்.இந்த மென்பொருளை நிறுவிய பின்னர் வரும் Settings பகுதியை விரும்பியவாறு மாற்றிக்கொள்ளலாம்.



இந்த மென்பொருளை தரவிறக்க

http://files.cnblogs.com/wangminbai/OfficeTab_v1.22.zip

இந்த Office Tab மென்பொருள் ஒரு சீன இணைய தளத்திலிருந்து தரவிறக்கப்படுகிறது.அந்த இணைய தளத்தின் URL இணைப்பு

http://hi.baidu.com/officecm/blog/item/19de9c6dcf6276f2431694b0.html

2 comments:

ஹாலிவுட் பாலா said...

கலக்கல் ஜி..! இது மாதிரி ‘ஆஃபீஸ்’ மென் பொருட்க்களை பத்தி சொல்லிட்டே இருங்க. நானும் காலத்தை ஓட்ட வேணாமா?! :)

பிரேம்ஜி said...

கண்டிப்பாக முயற்சிக்கிறேன் பாலா. வருகைக்கு நன்றி.