மைக்ரோசாஃப்ட்டின் இலவச மென்பொருட்கள்.

மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் XP,விண்டோஸ் விஸ்டா மற்றும் ஆபீஸ் பயன்பாட்டிற்கு 150 மென்பொருட்களை இலவசமாக தருகிறது.அனைத்தையும் ஒவ்வொன்றாக தேடி பிடிப்பது சிரமம் ஆதலால் இந்த பக்கத்தில் அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளன.

http://bhandler.spaces.live.com/blog/cns!70F64BC910C9F7F3!1231.entry?wa=wsignin1.0
read more "மைக்ரோசாஃப்ட்டின் இலவச மென்பொருட்கள்."

ஒபாமா பதவியேற்பு- ஒரு வித்தியாச தொழில்நுட்பப் பார்வையில்


டேவிட் பெர்மன்(David Bergman) என்னும் புகைப்படக்காரர் ஒபாமா பதவியேற்று பேசும் போது ஜிகாபன்(Gigapan) என்னும் அதிநவீன புகைப்பட உபகரணத்தின் மூலம் 220 ஒளிப்படங்களை எடுத்து இணைத்து ஒரு பனோரமிக் ஒளிப்படத்தை உருவாக்கியுள்ளார்.கீழே சொடுக்கி அந்த படத்தை பார்க்கலாம். சுட்டியின் மூலம் ஜூம்(zoom) செய்து பாருங்கள்.VIP பார்வையாளர்களை கவனியுங்கள்.ஒபாமா என்னவோ சீரியசாக பேசி கொண்டிருக்கிறார்.பல பேர் தூங்கி கொண்டிருக்கிறார்கள் :-))

http://gigapan.org/viewGigapanFullscreen.php?auth=033ef14483ee899496648c2b4b06233c
read more "ஒபாமா பதவியேற்பு- ஒரு வித்தியாச தொழில்நுட்பப் பார்வையில்"

A.R.ரஹ்மானின் புதிய இசை தொகுப்பு நோக்கியா கனெக்சன்ஸ்,திருக்குறளுக்கு இசை

(எச்சரிக்கை: கீழ்க்கண்ட வீடியோவில் வரும் நிகழ்வை பொது வாழ்வில் முயற்சிக்கும்போது கவனம் தேவை) :-))

நோக்கியா செல்பேசி நிறுவனத்திற்காக A.R. ரஹ்மான் இசையமைத்துள்ள புதிய இசை தொகுப்பு "நோக்கியா கனெக்சன்ஸ்"(Nokia Connections).நோக்கியாவின் சமீபத்திய MusicXpress செல்பேசிகளில் உள்ளீடு செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.விரைவில் கடைகளிலும் விற்பனை செய்யப்படும் என தெரிகிறது.ஆனால் இணையத்தில் படு சூடாக தரவிறக்கப்படுகிறது இந்த இசை தொகுப்பு.மொத்தம் 9 பாடல்கள்.திருக்குறளுக்கு இசை என்றவுடன் முதலில் அதை கேட்டு ரசித்தோம்.சுருக்கமாக அனைத்து பாடல்களை பற்றியும் பார்ப்போம்.

1) Jiya Se Jiya

பஞ்சாபி ஸ்டைலில் அமைந்துள்ள இந்த பாடல் விறுவிறுப்பான தாள கதியோடு முதல் முறை கேட்கும் போதே ஆட வைக்கிறது.நம்ம ட்ரம்ஸ் சிவமணி இந்த பாடலுக்கு வாசித்துள்ளார். வீடியோவிலும் வந்து ஆடுகிறார்.

Connections from பிரேம்ஜி on Vimeo.

2) Mann Chandre

நல்ல மெலடி.சிதாரும்,தபலாவும் இணைந்து பின்னணியில் இழைகிறது.சுக்விந்தர் சிங் உடன் பாடிய பாடகி யார் என்பது தெரியவில்லை.இரண்டாவது முறை கேட்கும் போதே பிடித்து போகிறது.

3) குறள்

ஒரு வித்தியாசமான இசை கலவை.கோரஸ் பகுதிக்கு பிறகு பெண் குரலில் ஆரம்பிக்கிறது. மனதை மயக்கும் இசை.பல முறை எம்மை கேட்கவைத்தது.நடுவில் ஒவ்வொரு குறளின் மொழியாக்கமும் ஆங்கிலத்தில் பாடப்படுகிறது.இதற்கு முன்னர் திருக்குறளுக்கு இசை அமைக்கப்பட்டுள்ளதா என தெரியவில்லை.

4) Silent Invocation - A

புல்லாங்குழலும்,தம்புராவும் மட்டும் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இசை.மிக மென்மையான இசை.

5) Sileent Invocation - B

சோகத்தை வெளிப்படுத்தும் இசை.புல்லாங்குழல் மற்றும் தம்புரா.மிக மென்மையான இசை கேட்பவர்களுக்கு மட்டும்.

6) Silent Invocation - C

புல்லாங்குழல் இசை மட்டும்.மீண்டும் மிக மென்மையான இசை.

7) Mylapore Blues

கர்நாடக சங்கீதத்துடன் மேற்கத்திய ப்ளூஸ் இசையை இணைத்து Fusion இசை.

8) Himalaya

மெதுவான பியானோ இசை திடீரென வேகம் பிடித்து சந்தூர் இசை கருவியோடு இணைகிறது.பனி மலை பிரதேசத்தில் உலவும் உணர்வை தருகிறது.

9) Mosquito

மோர்சிங் இசை கொசுவின் ரீங்காரத்தை ஏற்படுத்தி பின் சாரங்கி இசை முதன்மையாகிறது. நல்ல இசைக்கோர்ப்பு.


அமைதியான இசையை விரும்பி ரசிப்பவர்களுக்கு மிக நல்ல இசை தொகுப்பு.பாடல்களை தரவிறக்க

http://vellithiramusic.net/?p=1191
read more "A.R.ரஹ்மானின் புதிய இசை தொகுப்பு நோக்கியா கனெக்சன்ஸ்,திருக்குறளுக்கு இசை"

இணைய மக்கள் தொகை 100 கோடியை தாண்டியது

சென்ற டிசம்பர் மாதம் 2008 கணக்குப்படி உலகில் இணையத்தை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டியது. Comscore நிறுவனத்தின் குறிப்பின் படி ஒவ்வொரு நாட்டின் இணைய உபயோகிப்பாளர்கள் எண்ணிக்கை இது.

சீனா 179.7 மில்லியன்
அமெரிக்கா 163.3 மில்லியன்
ஜப்பான் 60 மில்லியன்
ஜெர்மனி 37 மில்லியன்
இங்கிலாந்து 36.7 மில்லியன்
பிரான்ஸ் 34 மில்லியன்
இந்தியா 32.1 மில்லியன்
ரஷ்யா 29 மில்லியன்
பிரேசில் 27.7 மில்லியன்
சவுத் கொரியா 27.3 மில்லியன்
கனடா 21.8 மில்லியன்
இத்தாலி 20.8 மில்லியன்
ஸ்பெயின் 17.9 மில்லியன்
மெக்சிகோ 12.5 மில்லியன்
நெதர்லாண்ட்ஸ் 11.8 மில்லியன்

ஆக உலகில் 15 முதல் 22 சதவிகித மக்களே இணையத்தை உபயோகிக்கின்றனர்.மேலும் எந்த இணையதளங்கள் அதிகம் பார்வையிடப்பட்டது என்ற தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.
http://www.comscore.com/press/release.asp?press=2698
read more "இணைய மக்கள் தொகை 100 கோடியை தாண்டியது"

உடைக்கும் செய்தி:ஆஸ்கர் விருதுகளுக்கு A.R. ரஹ்மான் 2 பிரிவுகளில் 3 பரிந்துரைகள் பெற்றுள்ளார்.Slumdog Millionaire 10 பரிந்துரைகள் பெற்றுள்ளது.

அடுத்த மாதம் பிப்ரவரி 22 ம் தேதி நடைபெறவுள்ள 81 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை ஒட்டி சற்று முன் அனைத்து பிரிவுகளிலும் பரிந்துரைப்புகள்(Nomination) வெளியிடப்பட்டுள்ளன.A.R.ரஹ்மான் சிறந்த இசையமைப்பு, சிறந்த பாடல் என இரு பிரிவுகளில் மூன்று முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

Slumdog Millionaire படத்திற்காக சிறந்த இசையமைப்பு பிரிவின் கீழ் ஒரு முறையும், சிறந்த பாடல் பிரிவின் கீழ் இரண்டு பாடல்களுக்காக (இரண்டும் Slumdog Millionaire படத்திலிருந்து)இரு முறையும் என மூன்று முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.Slumdog Millonaire திரைப்படம் சிறந்த திரைப்படம்,இயக்குனர்,ஒளிப்பதிவு,எடிட்டிங்,ஓலிப்பதிவு எடிட்டிங்,ஒலி இணைப்பு,திரைக்கதை என்ற பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு கீழே உள்ள தொடுப்பை சொடுக்கவும்.

http://www.oscars.org/awards/81academyawards/nominees.html
read more "உடைக்கும் செய்தி:ஆஸ்கர் விருதுகளுக்கு A.R. ரஹ்மான் 2 பிரிவுகளில் 3 பரிந்துரைகள் பெற்றுள்ளார்.Slumdog Millionaire 10 பரிந்துரைகள் பெற்றுள்ளது."

A.R.ரஹ்மானின் டெல்லி-6

டெல்லி 6 என்பது டெல்லியிலுள்ள சாந்த்னி ச்சவுக்(Chandni Chowk)என்னும் பரபரப்பான வணிகப் பகுதியை குறிக்கும்."ரங்க் தே பசந்தி" இயக்குனர் ராகேஷ் ஓம்ப்ரகாஷ் தனது சிறுவயதில் அங்கு வாழ்ந்த நினைவுகளின் அடிப்படையில் இப்படத்தை எடுத்துள்ளதாக தெரிகிறது.வரும் பிப்ரவரி 20ம் தேதி வெளியாகிறது.


டெல்லி 6 from பிரேம்ஜி on Vimeo.


மற்றொரு தொடுப்பு
Delhi 6
read more "A.R.ரஹ்மானின் டெல்லி-6"

40 நொடிகளில் ஒரு வருடம்

எரிக் என்பவர் தனது Canon 400D கேமரா மூலம் TimeLapse முறையில் எடுத்துள்ளார்.ஒலியும் இணைக்கப்பட்டுள்ளது.இந்த ஒளிப்படங்களை எவ்வாறு சலனப்படமாக மாற்றினார் என அவரது இணைய தளத்தில் கூறியுள்ளார்.


One year in 40 seconds from Eirik Solheim on Vimeo.


http://eirikso.com/2008/12/27/one-year-worth-of-images-give-some-amazing-videos
read more "40 நொடிகளில் ஒரு வருடம்"

ஹாரிஸ் ஜெயராஜின் "அயன்" mp3 பாடல்கள் தரவிறக்க...

read more "ஹாரிஸ் ஜெயராஜின் "அயன்" mp3 பாடல்கள் தரவிறக்க..."

என்ன செய்வது? பொருளாதார நெருக்கடியால் நிறுவன லோகோக்களின் நிலைமை இப்படி...

read more "என்ன செய்வது? பொருளாதார நெருக்கடியால் நிறுவன லோகோக்களின் நிலைமை இப்படி..."

"கஜினி" திரைப்படத்தை பார்த்து தங்கமணிகளின் எதிர்வினை

read more ""கஜினி" திரைப்படத்தை பார்த்து தங்கமணிகளின் எதிர்வினை"

தேனிலவு கொண்டாடும் தம்பதியருக்கு கொடைக்கானல் ஹோட்டல் அதிரடி சலுகை

read more "தேனிலவு கொண்டாடும் தம்பதியருக்கு கொடைக்கானல் ஹோட்டல் அதிரடி சலுகை"

கோல்டன் க்ளோப் விருது பெரும் முதல் இந்தியர்- A.R.ரஹ்மான் மற்றும் விருதுகளை அள்ளிய Slumdog Millionaire

நேற்று நடைபெற்ற Golden Globe இன் 66 வது விருது வழங்கும் நிகழ்ச்சியில் Danny Boyle இயக்கிய Slumdog Millionaire திரைப்படம் சிறந்த திரைப்படம்,சிறந்த இயக்குனர்(Danny Boyle),சிறந்த திரைக்கதை(Simon Beaufoy)மற்றும் சிறந்த இசையமைப்பு(A.R.Rahman) என நான்கு பிரிவுகளில் வெற்றி பெற்றுள்ளது.இந்த விருதை பெரும் முதல் இந்தியராகிறார் A.R. ரஹ்மான்.


A.R.ரஹ்மான் கோல்டன் க்ளோப் from பிரேம்ஜி on Vimeo.
read more "கோல்டன் க்ளோப் விருது பெரும் முதல் இந்தியர்- A.R.ரஹ்மான் மற்றும் விருதுகளை அள்ளிய Slumdog Millionaire"

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் தலைவர் ராமலிங்க ராஜு பதவி விலகல்


இந்தியாவின் நான்காவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான சத்யம் கம்ப்யூட்டர்ஸின் தலைவர் ராமலிங்க ராஜு பதவி விலகினார். சமீப காலமாக உலகவங்கி பிரச்சினை, மகன்களின் நிறுவனங்களுக்கு உதவ அவர்கள் நிறுவனங்களை வாங்க முடிவு செய்தது என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய ராமலிங்க ராஜு சற்று முன் தன் பதவி விலகலை அறிவித்தார்.நிறுவன கணக்கில் கைவைத்ததாக ஒத்துக்கொண்டுள்ளார்.கணக்கு காட்டப்பட வேண்டிய பணம் ஆயிரத்து இருநூற்று முப்பது கோடி ரூபாய் இருப்பதாக நம்பபடுகிறது.நிறுவன இயக்குனர்கள் முடிவுக்கு காத்திருக்கிறார்.தற்காலிகமாக ராம் மைனம்பட்டி தலைவராக இருக்கலாம் என தெரிகிறது.
read more "சத்யம் கம்ப்யூட்டர்ஸ் தலைவர் ராமலிங்க ராஜு பதவி விலகல்"

விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை

உலகின் 90சதவிகித கணினிகளில் பயன்படுத்தப்படும் விண்டோஸ் இயங்குதளம்(Operating System)முதல் பதிப்பிலிருந்து,வரப்போகும் விண்டோஸ் 7 வரை அடைந்துள்ள மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்களை படங்கள் மூலம் சுவாரஸ்யமாக அலசலாம்.

1) விண்டோஸ் 1.0

விண்டோஸ் இயங்கு தளத்தின் முதல் 7 பதிப்பை 1983 ஆம் ஆண்டிலேயே பில் கேட்ஸ் அறிவித்திருந்தாலும் ஆப்பிள் நிறுவனத்துடனான சட்ட சிக்கலில் மாட்டிகொண்டதால் 1985 ஆம் ஆண்டு தான் அறிமுகமானது. MS-DOS இயங்கு தளத்தின் நீட்டிப்பு போன்றே காணப்பட்ட இந்த இயங்கு தளம் தோல்வியடைந்தாலும் மல்டி டாஸ்கிங் மற்றும் சுட்டிக்கு(Mouse) ஆதரவு தந்தது.


2) விண்டோஸ் 2.0

ஆப்பிள் உடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஆப்பிளின் மேக் இயங்குதளத்தின் சில வசதிகளை விண்டோஸ் 2.0 இல் அறிமுகம் செய்தது. இருந்தும் ஒப்பந்தத்தை மீறி 170 காப்புரிமை பெறாத வசதிகளை பயன்படுத்தியதாக மைக்ரோசாப்ட்டை, ஆப்பிள் நீதிமன்றத்திற்கு இழுத்தது தனிக்கதை.


3) விண்டோஸ் 3.0

1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. நினைவகத்தை சிறப்பாக கையாண்ட, புதிய வடிவில் வெளிவந்த இந்த பதிப்பே விண்டோசின் முதல் வெற்றிகரமான பதிப்பு. இரண்டு வருடங்களில் ஒரு கோடி வட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. இதன் பிறகே மைக்ரோசாப்ட் தன் முழு கவனத்தையும் இயங்கு தள சந்தையில் செலுத்தியது.


4) விண்டோஸ் 3.11

விண்டோஸ் 3.0 இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பே இது. பல் ஊடக(Multimedia)வசதிகள் அதிகப்படுத்தப்பட்டு வெளியானது.


5) விண்டோஸ் 3.11 NT

32 பிட் ப்ராசசர்களுக்காக உருவாக்கப்பட இந்த பதிப்பு,பொறியாளர்களுக்கும் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே பயன்பட்டதால் அவ்வளவாக வரவேற்பில்லாமல் போனது.

6)விண்டோஸ் 95

1995 ஆம் ஆண்டு வெளியான இந்த பதிப்பு பெரும் வெற்றி பெற்று உலகெங்கிலும் உள்ள மக்களை ஈர்த்தது. இந்த பதிப்பில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இணைய உலாவியும் சேர்ந்தே வந்தது.ஸ்டார்ட் பொத்தான்,டாஸ்க் பார் போன்ற வசதிகள் இந்த பதிப்பிலிருந்தே ஆரம்பித்தது.


7) விண்டோஸ் 98

விண்டோஸ் 95 ஐ ஒப்பு நோக்கும்போது சற்று மேம்படுத்தப்பட்டு, FAT 32 கோப்பு வசதியுடன்,எக்ஸ்ப்ளோரர் உலாவி உள்ளீடு செய்யப்பட்டு வெளிவந்தது.


8) விண்டோஸ் 2000

2000 ஆம் ஆண்டு வெளியான NT வரிசை பதிப்புகளில் மேம்படுத்தப்பட்ட பதிப்பு.

9) விண்டோஸ் ME

இந்த வரிசையில் ஒரு தவறுதலான பதிப்பாக கருதப்படும் ME 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. பாதுகாப்பு குறைபாடுகள், உறுதியற்ற தன்மையுடன் இருந்த இந்த பதிப்பு படு தோல்வியடைந்தது.


10) விண்டோஸ் XP

கோப்புகள் மேலாண்மை(File Management),பாதுகாப்பு,உறுதி,வேகம் என அனைத்து பிரிவுகளிலும் மேம்படுத்தப்பட்டு 2001 ஆம் ஆண்டு வெளியானது. இன்று வரை அலுவலகங்களில் உபயோகப்படுத்தப்படுகிறது.


12)விண்டோஸ் விஸ்டா

பார்வைக்கு புதிய மெருகோடு 2007 ஜனவரி மாதம் வெளியானது. பல மென்பொருட்கள் இந்த பதிப்போடு சரிவர இயங்காததால், மிக அதிக நினைவகத்தை எடுத்து கொள்வதால் பலர் விண்டோஸ் xp பதிப்பையே வைத்து கொண்டுள்ளனர்.


13) விண்டோஸ் 7

வெளியாகும் தேதி அறிவிக்கப்படாவிட்டாலும், சென்ற வாரம் சில டோரன்ட்(Torrent) தளங்களில் முறையற்ற பதிப்பு வெளியாகிவிட்டது. மற்றெந்த பதிப்புகளையும் விட வேகமானதாகவும் இருப்பதாக நம்பப்படுகிறது.



நன்றி: விக்கி
read more "விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை"