தற்போது கடலடி ரோபோக்களை உபயோகித்து இதை படம் பிடித்து பின்னர் கவனமாக ஆராய்ச்சி நிலையத்திற்கு கொண்டு வந்து ஆராய்ந்து வருகின்றனர்.இந்த மீனின் சிறப்பம்சம் ஒளி ஊடுருவும் இதன் தலைப்பகுதி.மிக சிறப்பான பச்சை நிற பெரிய கண்களை உடையது.அந்த கண்கள் மூலம் ஒளி ஊடுருவும் தலை பகுதியை உபயோகித்து தலையை அசைக்காமல் தலைக்கு மேலே உள்ள விசயங்களை பார்க்க முடியும்.எதிரிகளிடமிருந்து காப்பாற்றிக்கொள்ளவும்,இரையை கவ்வவும் மிகவும் உபயோகமாக உள்ளது.கடலடி சூழ்நிலைக்கேற்ப இந்த மீன் பரிணமித்துள்ளது.
இந்த மீனின் தலை பகுதி மிக தெளிவான தூய நீர் நிரம்பி உள்ளது.பல மணி நேரம் நீரில் அசையாமல் நிற்கும் திறன் கொண்ட இம்மீன் தனது பெரிய பச்சை நிற கண்கள் மூலம் அசையாமல் எல்லா பக்கமும் பார்க்கும் திறன் கொண்டது.இந்த மீன் மேல்புறம் பார்க்கும் போது இதன் கண்களில் மேல் புறம் உள்ள பச்சை நிறமிகள்(Pigments)சூரிய வெளிச்சத்தை கண் கூசாமல் தடுத்து கட்டுப்படுத்துகிறது.இந்த வீடியோவில் பேசுவது இதன் ஆராய்ச்சியாளர் ப்ரூஸ்.(இது அதி துல்லிய வீடியோ(High Definition Video)ஆதலால் படம் ஓடுவது இணைய இணைப்பின் வேகத்திற்கேற்ப சற்று தாமதமாகலாம்)







