Showing newest 8 of 12 posts from March 2009. Show older posts
Showing newest 8 of 12 posts from March 2009. Show older posts

மைக்ரோசாப்ட்டின் $250,000 பரிசும்,Conficker.C யின் ஏப்ரல் 1 ஆம் தேதி கலவரமும்



கணினி உலகை கலவரப்படுத்திக் கொண்டுள்ளது இந்த Conficker கணினி Worm. கணினி தொழில்நுட்பத்தில் Worm என்பது தன்னை போலவே மற்றொரு பிரதியை உருவாக்கி கொள்ளும் ஊறு விளைவிக்க கூடிய சிறிய கணினி மென்பொருள்.முக்கியமாக நெட்வொர்க் இணைப்புகளில் உள்ள கணினிகளை குறி வைத்து அவற்றுள் சென்று ஒளிந்து கொண்டு பின்னர் இதனுடன் இணைக்கப்பட்ட Payload எனும் சிறிய கணினி நிரல் கட்டளைகளை ஏற்று அதன்படி செயலாற்றும்.இதை போன்ற ஒரு கணினி worm தான் Conficker.

பொதுவாக வோர்ம்கள் முதலில் பரவி பிறகு,அதை அனுப்பியவர்களில் கட்டளைக்காக காத்திருக்கும் அல்லது Payload எனப்படும் worm உடன் இணைந்த சிறிய கணினி கட்டளை நிரல் அது என்ன செய்ய வேண்டும் என ஆணையிடும்.Conficker விஷயத்தில் இதுவரை அதை உருவாக்கியது யார்,எங்கிருந்து வந்தது,என்ன செய்ய போகிறது,அதையும் எப்போது செய்யும் என யாருக்கும் தெரியாது.கண்டுபிடிக்கவும் முடியவில்லை.படு புத்திசாலித்தனமாக, மிக கடினமான கணித அல்காரிதம்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கணினி வல்லுனர்கள் கூறுகின்றனர்.

சென்ற ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி இந்த Conficker.A வோர்ம் பரவ ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.இது பரவ விண்டோஸ் கணினிகளில் உள்ள சிறிய பாதுகாப்பு குறைபாடு முக்கிய காரணமாக இருக்கிறது.நெட்வொர்க் கணினிகளில் உள்ள பலவீனமான பாஸ்வோர்ட்களை உடைத்து உள்ளே புகும்.அதன் பிறகு தன்னை தானே பிரதி எடுத்து நெட்வொர்க்கில் உள்ள கணினிகள் மற்றும் USB டிரைவ் பயன்படுத்தும்போது மற்ற கணினிகளுக்கும் பரவ ஆரம்பிக்கிறது.சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் இதன் அடுத்த பதிப்பாக Conficker.B பரவ ஆரம்பித்தது.பின்னர் உச்சமாக கடந்த பிப்ரவரி மாதம் Conficker.C,இது தான் சக்திவாய்ந்ததாக கருதப்படுகிறது,பரவியது.இவை ஒரே வோர்மின் மேம்படுத்த பட்ட மென்பொருட்கள்.உடனடியாக மைக்ரோசாப்ட் நிறுவனம் patch களை கொடுக்க ஆரம்பித்தது.

Sophos நிறுவனத்தின் கணினி பாதுகாப்பு வல்லுநர் கிரகாம் க்ளுலே(Graham Cluley) கூறும் போது, "இது உலகம் முழுவதும்,தாக்க தயாராக உள்ள ஒரு கணினி ராணுவத்தை உருவாக்கி வைத்திருப்பது போல் தோன்றுகிறது" என்கிறார்.இந்நிலையில் தான் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி அன்று இந்த வோர்ம் உலகம் முழுவதும் பரவியுள்ளதாக கருதப்படும் 90 லட்சம் கணினிகளை தாக்க போவதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.அன்று ஏதாவது செய்யும் என்று நிச்சயம் சொல்வதற்கில்லை என்கிறார் கிரகாம் க்ளுலே.வழக்கம் போல ஊடகங்கள் கலவரப்படுத்தி கொண்டுள்ளன.ஆனால் ஒரு நாளில் mphtfrxs.net, imctaef.cc,hcweu.org,sdksjiewl.com இப்படி 50,000 க்கும் அதிகமான டொமைன் பெயர்களை கொண்ட போலியான தளங்களுக்கு தொடர்புகளை ஏற்படுத்தும்.ஆனால் அவற்றில் ஒன்றே ஒன்றுதான் இதை அனுப்பியவரின் தளமாக இருக்கலாம் என தெரிகிறது.

மேலே சொன்ன ஒரு நாளில் 50,000 தளங்களை தொடர்பு கொள்ள ஆரம்பித்து அவற்றில் உள்ள ஒரே ஒரு தளத்திலிருந்து அது என்ன செய்ய வேண்டும் என கட்டளைகளை வாங்க ஆரம்பிக்கலாம்.அப்படி ஆரம்பித்தால்,நூற்றுக்கணக்கான Spam மின்னஞ்சல்களை அனுப்புவது,மேலும் பலவீனமான பாஸ்வேர்டுகளை உடைத்து மேலும் தன்னை மேம்படுத்திக்கொண்டு புகுவது,நெட்வொர்க் இணைப்புகளை பலவீனமாக்கி,தகவல் பரிமாற்றத்தை தடை செய்வது,இதை ஒரு சைபர் ஆயுதமாக பயன்படுத்தி அரசாங்க தளங்களை தாக்குவது போன்ற செயல்களை செய்ய ஆரம்பிக்கலாம் என கணினி வல்லுனர்கள் பல சாத்தியங்களை கூறுகின்றனர்.ஏற்கனவே இங்கிலாந்தின் பாராளுமன்ற கணினி அமைப்பில் புகுந்துள்ளது Conficker வோர்ம்.

Symantec நிறுவனத்தின் கருத்துப்படி ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகு Conficker C தாக்கிய கணினி மைக்ரோசாப்ட்டின் பாதுகாப்பு Updates பெறமுடியாதபடி தடுக்கலாம்.மேலும் அதை உருவாகியவர்கள் உடைப்பதற்கு மிக கடினமான முறையை கொண்டு ஒளிந்து கொண்டுள்ள வோர்ம்களை தொடர்பு கொள்ள முயற்சிக்கலாம் என கூறுகிறது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த Conficker வோர்மை கண்டுபிடித்தவர் பற்றிய தகவல்களை ஆராய்ந்து கூறினால் $ 250,000 டாலர்கள் பரிசு தரப்போவதாக கூறியுள்ளது.

Conficker வோர்மை தடுக்க விண்டோஸ் இன் Updates களை உடனுக்குடன் நிறுவ வேண்டும்.Symantec,Mcafee நிறுவனங்கள் ஏற்கனவே இந்த Conficker வோர்மை அழிக்கும் Updates களை கொடுத்துள்ளன.
read more "மைக்ரோசாப்ட்டின் $250,000 பரிசும்,Conficker.C யின் ஏப்ரல் 1 ஆம் தேதி கலவரமும்"

பூமிக்கு வாக்களித்து பூமி நேரத்தை பாவியுங்கள்



இந்த ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் தேதி இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை இந்த பூமி நேரம் உலகெங்கும் பாவிக்கப்படுகிறது.உலகில் எந்த இடத்தில் நாம் இருந்தாலும் 28 ஆம் தேதியன்று இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை விளக்குகள்,மின்சாதனங்களை நிறுத்தி பூமி நேர இயக்கத்தில் பங்கு கொள்ளலாம்.

உலகம் வெப்பமயமாதல்(Global Warming)குறித்த விழிப்புணர்வு ஏற்பட 2007 ம் ஆண்டு World Wildlife Fund மூலம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிகழ்வு தான் பூமி நேரம்(Earth Hour)எனப்படுகிறது.இதன் படி ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமையன்று இரவு ஒரு மணி நேரம் வீடுகள்,அலுவலகங்கள்,பொது இடங்கள், மற்றும் தொழிற்சாலைகளில் என அனைத்து இடங்களிலும் விளக்குகள் அணைக்கப்பட்டு மின்சார சாதனங்கள் நிறுத்தப்படுகின்றன.

உலக வெப்பமயமாதல் தற்போது உலகை அச்சுறுத்தும் முக்கிய காரணியாக இருக்கிறது. தொழிற்சாலைகள்,வாகனங்கள் வெளியிடும் புகை,அசுத்தங்களால் காற்று மண்டலத்தில் வெப்பநிலை அதிகரிக்கிறது.ஆகவே துருவங்களில் உள்ள பெரும் பனிப்பாறைகள் உருகுகின்றன.கடல் நீர் மட்டம் அதிகரிக்கிறது.

மின்சாரம் தயாரிக்க உலகம் முழுவதும் பெரும்பாலும் நிலக்கரி உபயோகிக்கப்படுகிறது.மின் நிலையங்களில் இதற்காக பயன்படுத்தப்படும் நிலக்கரி, மின் உற்பத்தி முடிந்தவுடன் கரியாக மாறி காற்று மண்டலத்தில் சேர்கிறது.உலக வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமாக இது உள்ளது.

Al Gore எழுதிய "An Inconvenient Truth"(ஒரு சங்கடமான உண்மை)என்னும் புத்தகத்தில் உலக வெப்பமயமாதலுக்கு உலகில் உள்ள நாடுகளில் அமெரிக்கா மட்டும் 30 சதவிகிதம் காரணமாக இருப்பதை குறிப்பிடுகிறார். ஐரோப்பிய நாடுகள்,சீனா,ரஷ்யா,கனடா,ஆஸ்திரேலியா நாடுகளும் தன் பங்கிற்கு சுற்று சூழலை மாசுபடுத்துகின்றன.இந்தியாவிலும் ஒவ்வொரு நாளும் 25000 க்கு மேற்பட்ட கார்கள் மற்றும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சாலைக்கு வருகின்றன.

2007 ஆண்டு சிட்னி நகரில் ஒரு மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டபோது நகரின் 22 லட்சம் மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு 10 சதவிகிதம் மின் சக்தியை மிச்சப்படுத்தினர். ஊடகங்கள்,இணையம் மூலம் இந்த செய்திகளை இடம் பெற செய்து சென்ற 2008 ஆம் அண்டு 35 நாடுகளில் உள்ள 5 கோடி மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் தேதி இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை இந்த பூமி நேரம் உலகெங்கும் பாவிக்கப்படுகிறது.உலகில் எந்த இடத்தில் நாம் இருந்தாலும் 28 ஆம் தேதியன்று இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை விளக்குகள்,மின்சாதனங்களை நிறுத்தி பூமி நேர இயக்கத்தில் பங்கு கொள்ளலாம்.

இந்த ஆண்டு 84 நாடுகளில் உள்ள மக்கள் பூமி நேரத்தை பாவிக்க உள்ளார்கள்.இம்முறை 100கோடி மக்களை பங்கெடுக்க செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளனர்.இந்த ஆண்டு இது போல் பூமி நேரம் பாவிப்பது பூமிக்கும்,உலக வெப்பமயமாதலுக்கும் இடையேயான போட்டியாக கருதப்பட்டு நீங்கள் விளக்குகளை அணைத்தால் பூமிக்கு வாக்களிப்பது போலவும்,அணைக்காவிட்டால் உலக வெப்பமயமாதலுக்கு வாக்களிப்பது போலவும் ஒரு கருத்துரு உருவாக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்வுக்கு பின்னர் இந்த விழிப்புணர்வை பற்றிய விவரங்களை கோபென்ஹேகனில் நடைபெறும் உலக காலநிலை மாற்ற மாநாட்டில்(Global Climate Change Conference)சமர்ப்பிக்கவுள்ளனர்.

மின் சக்தி தேவை குறையும் போது மின் நிலையங்களில் நிலக்கரி உபயோகமும் குறைகிறது.உலகம் முழுவதும் இம்முறை மக்கள் பங்கு பெற்றால் அதிக அளவு மிச்சப்படுத்தலாம்.இது ஒரு சிறிய முயற்சியே.இதன் பின்னால் மறைமுக நன்மைகள் அதிகமே.

சென்ற வருடம் கூகிள் வலைத்தளம் கூட அன்று ஒரு நாள் தன் முகப்பு பக்கத்தை கருப்பு நிறத்தில் இருண்டதாக அமைத்திருந்தது.


(கூகிள் இது போன்று உலக நிகழ்வுகளை சுவாரஸ்யமாக தன் தளத்தில் காண்பிப்பதை கீழே உள்ள தொடுப்பை சொடுக்கி அறிந்து கொள்ளலாம்.
கூகிள் லோகோக்கள்-சில சுவாரஸ்யமான தகவல்கள் )

நகரமயமாக்கல் மற்றும் பரபரப்பான வாழ்க்கையில் இயந்திரம் போல இயங்கி கொண்டிருக்கிறோம்.இந்த ஒரு மணி நேரம் விளக்குகள்,தொலைக்காட்சி இன்ன பிற சாதனங்களை அணைத்து விட்டு குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழலாம்.பல வாரங்களாக அதீத வேலைப்பளு காரணமாக சோர்வடைந்துள்ள நான் இந்த பூமி நேரத்தின் போது தங்கமணியுடன் காலாற சிறிது தூரம் நடந்து சென்று வரலாம் என எண்ணியுள்ளேன்.

பூமி நேர நிகழ்வின் அதிகார பூர்வ இணைய தளம் இது.

www.earthhour.org

பூமி நேரம் பற்றிய வீடியோ

read more "பூமிக்கு வாக்களித்து பூமி நேரத்தை பாவியுங்கள்"

நாசாவிற்கு சவால் விட்ட நான்கு ஸ்பானிஷ் மாணவர்கள்

ஸ்பெயின் நாட்டில் உள்ள கேடலோனியா(Catalonia)என்னும் ஊரில் உள்ள பள்ளியில் படிக்கும் ஜெரார்ட்(Gerard),செர்ஜி(Serji),மார்ட்டா(Marta),ஜெவும்(Jaume)என்னும் நான்கு மாணவர்கள் தங்கள் ஆசிரியரோடு இணைந்து தங்கள் பள்ளிக்கூட அறிவியல் திட்டத்திற்காகவும்(Project),கால நிலை,புவி மண்டல மாறுபாடுகளை அறிவதற்காகவும் ஒரு பலூனை சாதாரண காமெராவோடு வானில் அனுப்பி அசத்தலான புகைப்படங்கள் எடுத்து வர வைத்து சாதனை புரிந்துள்ளனர்.

இந்த சாதனைக்கு ஸ்பானிஷ் மாணவர்கள் உபயோகப்படுத்தியது 60 டாலர்கள் மதிப்புள்ள ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட லேடக்ஸ் பலூன்,80 டாலர்கள் மதிப்புள்ள ஒரு சாதாரண நிகான் கேமரா,ரேடியோ ட்ரான்ஸ்மிட்டர்,ரிசீவர்,மற்றும் கூகிள் எர்த்.சென்ற பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி காலை 9.10 மணிக்கு குறிப்பிட்ட நேர இடைவெளியில் தானாகவே படம் பிடிக்க கூடிய முறையில் அமைக்கப்பட்ட நிக்கான் கேமரா,ட்ரான்ஸ் மிட்டர் சாதனங்களை பாதுகாப்பாக வடிவமைத்து(ஏனெனில் வானில் மேலே செல்ல வெப்பநிலை அதீதமாக குறைந்து மைனஸ் 65 செல்சியஸ் வரை குறையக்கூடும்)ஒன்றரை கிலோ எடைகொண்ட அவர்களின் காலநிலை அளக்கும் சாதனத்தை ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூனில் பொருத்தி வானில் அனுப்பினர்.

இந்த மாணவர் குழுவின் தலைவர் ஜெரார்ட்,"பலூனை வானில் அனுப்பிவிட்டு கூகிள் எர்த் மற்றும் ரிசீவரை கொண்டு நாங்கள் பலூனின் பாதையை நோட்டமிட ஆரம்பித்தோம். அதிகபட்சம் 10000 அடி முதல் 30000 அடிகள் வரை தான்,அதாவது சாதாரணமாக விமானங்கள் செல்லும் அதிகபட்ச உயரம்,அது செல்லும் என நினைத்தோம்" என்று கூறுகிறார்.

ஆனால் அந்த பலூன் அவற்றை கடந்தது 100000 அடிகள் மேலே சென்றது.கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர்கள் உயரம்.பின்னர் மெதுவாக ஹீலியம் வாயு பலூனில் குறையதொடங்கியதும் உயரமிழக்க தொடங்கி,பறக்க விடப்பட்ட இடத்திலிருந்து 10 கிலோமீட்டர்கள் தள்ளி பூமியில் விழுந்தது.

மிகுந்த வெப்பநிலை மாற்றங்களை கடந்திருந்தாலும் அவர்களின் காலநிலை பெட்டியின் ட்ரான்ஸ்மிட்டர்,கேமராவின் நினைவக அட்டை(Memory Card) செயல்பாட்டு நிலையிலேயே இருந்தன.பாடபுத்தகங்கள் சொல்லி கொடுக்காத பல விஷயங்களை இந்த முயற்சி தங்களுக்கு சொல்லி தந்ததாக கூறுகிறார்கள் இந்த மாணவர்கள்.பள்ளி மாணவர்களின் இந்த முயற்சி பல ஆராய்ச்சியாளர்களை கவர்ந்துள்ளது.ஆரம்பம் முதல் முடிவு வரை அவர்கள் முயற்சி மற்றும் அவர்களின் சாதனம் வானில் எடுத்த புகைப்படங்கள்.
























அவர்களின் ப்ராஜக்டின் முழுமையான படங்களுக்கு கீழே உள்ள தொடுப்பை சொடுக்கவும்.

http://www.flickr.com/photos/meteotek08/
read more "நாசாவிற்கு சவால் விட்ட நான்கு ஸ்பானிஷ் மாணவர்கள்"

வீடியோ: கடலடி எரிமலையின் வெடிச்சீற்றம்

நியூசிலாந்துக்கு அருகே தெற்கு பசிபிக் கடல் பகுதியில் உள்ள சிறிய தீவு நாடு டோங்கா (Tonga).இந்த நாட்டின் கடற்பரப்பில் கடலின் அடியில் உள்ள எரிமலை ஒன்று நான்கு நாட்கள் முன்பு வெடித்து குமுறி எரிமலை குழம்பை பீய்ச்சியடித்தது.அந்த வழியாக கப்பலில் சென்ற ஆய்வாளர்கள் குழு எடுத்த வீடியோ இங்கே.

read more "வீடியோ: கடலடி எரிமலையின் வெடிச்சீற்றம்"

Sun Microsystems நிறுவனத்தை விலை பேசும் IBM

ஐபிஎம் நிறுவனம் 6.5 பில்லியன் டாலர்கள் விலை கொடுத்து சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தை வாங்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த செய்தி வெளி வந்தவுடன் இன்று அமெரிக்க பங்குச்சந்தையில் சன் மைக்ரோ நிறுவனத்தின் பங்குகள் 78.67% சதவீதம் அதிகரித்தது.மேலதிக விபரங்களுக்கு கீழே உள்ள தொடுப்பை சொடுக்கவும்...

http://www.msnbc.msn.com/id/29752352

http://news.yahoo.com/s/nm/20090318/bs_nm/us_sunmicro_takeover_ibm
read more "Sun Microsystems நிறுவனத்தை விலை பேசும் IBM"

சாம்சங்கின்(Samsung) உலகின் மிகப்பெரிய செல்போன்

சாதனைக்காக என்றாலும் துல்லியமாக வேலை செய்கிறது இந்த செல்போன்.ஆனால் ஏணியில் ஏறித்தான் டயல் செய்யமுடியும்.:-)) சாம்சங் மற்றும் கிரிக்கெட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த செல்போன் சிகாகோவில் மார்ச் 11 அன்று பார்வைக்கு வைக்கப்பட்டது.13 அடி உயரம் மற்றும் 15 அடி நீளம் கொண்ட இந்த போன் வழக்கமான செல்போன்கள் போலவே அழைப்புகள்,SMS வசதியும் கொண்டது.கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது இந்த செல்போன்.

read more "சாம்சங்கின்(Samsung) உலகின் மிகப்பெரிய செல்போன்"

விக்கிபீடியாவிலிருந்து மென்புத்தகம்(PDF) தயாரிப்பது எப்படி?

தகவல் களஞ்சியமான விக்கிபீடியா(Wikipedia)ஆங்கிலத்தில் மட்டும் மூன்று கோடி தகவல் பக்கங்களை கொண்டுள்ளது.அதிலிருந்து நமக்கு வேண்டிய தகவல் பக்கங்களை தொகுத்து மென்புத்தகமாக PDF வடிவில் தரவிறக்கிக் கொண்டால் இணையதொடர்பு இல்லாமல் படித்து கொள்ளலாம்.அச்சடித்து கொள்ளலாம்.ஒரு உதாரணத்திற்கு நாம் தமிழ்நாடு மற்றும் தமிழ் உணவு வகைகளை பற்றிய பக்கங்களை PDF வடிவில் தரவிறக்குவோம்.

முதலில் விக்கிபீடியாவில் ஒரு பயனர் கணக்கை(Account)உருவாக்க வேண்டும்.


பின் உள்நுழைந்து நமக்கு வேண்டிய பக்கத்தை தேடி,இடது பக்கத்தில் உள்ள Create Book என்னும் பகுதியில் "Add Wiki Page" ஐ சொடுக்கி நாம் தேடிய பக்கத்தை சேமிக்கலாம்.இது போல் நமக்கு தேவையான பக்கங்களை மேலும் சேர்த்துக்கொள்ளலாம்.


பின்னர்,"Show Book" ஐ சொடுக்கி நாம் சேர்த்த பக்கங்களுக்கு உரிய தலைப்பை கொடுத்து PDF வடிவில் தரவிறக்கிக் கொள்ளலாம்.PDF வடிவில் மாற்றும் போது விக்கிபீடியாவே பக்கங்களை,படங்களை தகுந்த முறையில் நேர்படுத்தி தருகிறது.

read more "விக்கிபீடியாவிலிருந்து மென்புத்தகம்(PDF) தயாரிப்பது எப்படி?"

அசத்தலாக வடிவமைக்கப்பட்ட லோகோக்கள்(Logos)

இங்கே கொடுக்கப்பட்டுள்ள லோகோக்கள்(Logos)உலகின் பல பாகங்களில் உள்ள நிறுவனங்கள்,கடைகள்,அமைப்புகள் ஆகியவற்றுக்காக சற்று புத்திசாலித்தனமாக,அசத்தலாக,கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பல சமயங்களில் நிறுவனங்களின் பெயர்களை அவற்றின் லோகோக்களை வைத்தே அறிந்து கொள்ளலாம்.மக்கள் மனதில் எளிதில் பதியக்கூடியது நல்ல முறையில் வடிவமைக்கப்பட்ட நிறுவனங்களின் லோகோக்கள்.இங்கு கொடுக்கப்பட்டுள்ளவைகளில் சில லோகோக்களை உற்று கவனித்தால் அது சொல்ல வரும் விஷயம் புரியும்.














Message






Play








Business Secret




Maverick Trousers












read more "அசத்தலாக வடிவமைக்கப்பட்ட லோகோக்கள்(Logos)"