Firefox இணைய உலாவியின் 3.5 இறுதி பதிப்பு இன்று முதல் Mozilla தளத்தில் தரவிறக்க கிடைக்கிறது.விண்டோஸ்,மேக் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களுக்கும் தரவிறக்க கிடைக்கிறது.பல புதிய சிறப்பம்சங்களுடன் வந்துள்ள Firefox 3.5 மேலும் மிக வேகமாக இணைய பக்கங்களை தரவிறக்குகிறது.
Sunspider என்னும் Javascript சோதனையை 1524 மில்லி வினாடிகளில் முடிக்கிறது என Mozilla தளம் சொல்கிறது.எனது கணினியில் 1572 மில்லி வினாடிகளில் முடிக்கிறது.இணைய பக்கங்கள் படு வேகமாக தரவிறங்குகின்றன. Firefox 3.5 தரவிறக்க
நான்கு நாட்கள் முன்பு மாலை 4:30 மணி அளவில் அலுவலக நண்பர் ஆண்ட்ரு ஸ்மித் தளர்ந்த முகத்துடன் "Prem! Michael Jackson is No more" என்று சொன்னபோது அலுவலக வேலை பார்த்து கொண்டே எனக்கு ஜாக்சன் பாடல்களில் மிக பிடித்த "In the Closet" கேட்டுக்கொண்டிருந்தேன்.ட்விட்டர் ஸ்தம்பித்தது போல் எனக்கும் ஆனது.
நான் வாழ்ந்த கிராமத்தில் இருந்து நகரத்திற்கு படிக்க வந்த போது பதின்ம வயதுகளில் என்னையும் துள்ள வைத்தது ஜாக்சனின் டேஞ்சரஸ்(Dangerous).ஒரு தலைமுறையையே கட்டிப்போட்டது மைக்கேலின் இசையும்,நடனமும்.
13 கிராமி விருதுகளுடன்(இதுவே ஒரு உலக சாதனையாம்)உலகமெங்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற மைக்கேல் சொந்த வாழ்வில் பல சிக்கல்களை,முரண்களை சந்தித்தாலும் தொழிலில் அசைக்க முடியாத ஆளுமை பெற்றிருந்தார்.அவருடைய இசை கச்சேரிகளுக்கு வரும் ஆயிரக்கணக்கான மக்கள்,அவரை நேரில் பார்த்ததுமே கண்ணீர் விட்டு உணர்ச்சி பெருக்குபவர்கள் என ஒரு பெரும் கூட்டத்தையே பல நாடுகளில் வசியப்படுத்தி வைத்திருந்தார்.
இந்த வீடியோ அதற்கு ஒரு சான்று.மைக்கேலின் "Greatest Hits" என்னும் வீடியோவில் மைக்கேல் உலக நாடுகளுக்கு இசை சுற்றுலா சென்றபோது மக்கள் ஆரவாரங்களின் தொகுப்பு.பின்னணியில் ஒலிப்பது மேற்கத்திய செவ்வியல்(Western Classical) இசை கலைஞர் கார்ல் ஆர்ஃப்(Carl Orff)பின், கார்மினா பியுரானா(Carmina Burana) இசைக்கோவையில் முக்கிய இசையான ஓ ஃ பார்ச்சுனா(O Fortuna).அந்த காலத்தில் Old Spice விளம்பரத்திலும் உபயோகித்திருப்பார்கள்.
இப்போது உயில் கூட எழுதி வைக்காமல் இறந்தாலும் இறந்தார்,அவர் செலவளித்தது போக மீதம் சொத்துகள் யாருக்கு என பெரும் போட்டியே நடந்து கொண்டிருப்பதாக சிஎன்என்னில் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
மார்ச் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு(International Space Station) பயணப்படுவதற்கு முன்பே நாசாவிடம் இந்த திரைப்படம் வெளியானவுடனேயே விண்வெளியில் பார்க்க விரும்புவதாக தன் கோரிக்கையை சொல்லியிருந்தார் அமெரிக்க விண்வெளி வீரர் மைக்கேல் பாராட்(Michael Barratt).அவர் கேட்டுக்கொண்டதை போலவே தயாரிப்பு நிறுவனத்தின் அனுமதியுடன் நாசா விஞ்ஞானிகள் மைக்கேலின் கோரிக்கையை நிறைவேற்றினர். அந்த திரைப்படம் தற்போது வெளிவந்து வசூலில் பட்டையை கிளப்பிகொண்டிருக்கும் ஸ்டார் ட்ரெக்(Star Trek) தான்.JJ Abraham இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை நாசா விஞ்ஞானிகள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அப்லோட் செய்ய,மைக்கேல் தன் சக விண்வெளி வீரர்களான ரஷ்ய படல்கா,ஜப்பானிய வகாடாவுடன் கணினி திரையில் பார்த்துள்ளார்.அவர் சிறுவயதில் தொலைக்காட்சியில் பார்த்த ஸ்டார் ட்ரெக் தொடர் தான்,விண்வெளி வீரராக வருவதற்கான ஊக்கத்தை தந்தாக சொல்கிறார் மைக்கேல்.
படம் தொடக்கம் முதல் முடிவு வரை வேகமென்றால் வேகம் ராக்கெட் வேகம்.தொழில்நுட்ப பிரிவுகளில் 2010 ஆஸ்கர் விருதுகளுக்கு போட்டியிட படம் இப்போதே தயார்.ஒரே வரியில் சொல்வதென்றால் இரண்டு மணி நேர கிளைமாக்ஸ்.படத்தின் விரிவான விமர்சனம் ஹாலிவுட் பாலா http://hollywoodbala.blogspot.com/2009/06/star-trek-2009.html பக்கத்தில்...
இதோ வருகிறது..அதோ வருகிறது என சொல்லி முதலில் குமோ(Kumo)என பெயர் வைத்து பின்னர் முடிவாக பிங்(Bing)என்ற பெயருடன் இன்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளது மைக்ரோசாப்ட்டின் புதிய தேடுபொறி.
முகப்பு பக்கத்தில் துருக்கி நாட்டிலுள்ள கப்படோசி(Cappadocia)என்னும் இடத்தில் பழங்கால நாகரிகம் அமைந்திருந்த பள்ளத்தாக்கில் பலூன்கள் பறப்பது போன்ற பின்புலத்துடன் வந்துள்ளது பிங்.
கூகிள் தேடு பொறிக்கு சரியான சவாலாக இருக்கும் என பரவலான பேச்சுக்களுடன் வந்திருக்கும் பிங், கூகிள் ஐ போன்றே அதிக பட்ச தெரிவுகளை தர இன்னும் சிறிது காலம் பிடிக்கும் போல தெரிகிறது.கூகிளை விட சற்றே இலகுவாக தேட சில வசதிகள் உதாரணத்திற்கு குறிச்சொல் சம்பந்தப்பட்ட வேறு பல உரல்களையும் இடது பக்கத்தில் காட்டுகிறது.மற்றபடி கூகிளில் உள்ள வசதிகளே பெரும்பாலும் இதிலும் உள்ளன. தேடிப்பாருங்கள் பிங்கில்.