திரைப்பட விசுவல் எஃபெக்ட்ஸ்- 100 வருடங்கள்

தற்போது ஹாலிவுட் திரைப்படங்களில் மிகமுக்கிய பங்கு வகிக்கும் விசுவல் எஃபெக்ட்ஸ்(Visual Effects)எவ்வாறு கடந்த 100 வருடங்களுக்கு மேலாக வளர்ச்சியடைந்து வந்துள்ளன என்பதை சொல்லும் ஒரு சுவாரஸ்யமான தொகுப்பு.



இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ள படங்கள்:

1900 - The Enchanted Drawing
1903 - The Great Train Robbery
1923 - The Ten Commandments (Silent)
1927 - Sunrise
1933 - King Kong
1939 - The Wizard of Oz
1940 - The Thief of Bagdad
1954 - 20,000 Leagues Under the Sea
1956 - Forbidden Planet
1963 - Jason and the Argonauts
1964 - Mary Poppins
1977 - Star Wars
1982 - Tron
1985 - Back to the Future
1988 - Who Framed Roger Rabbit
1989 - The Abyss
1991 - Terminator 2: Judgement Day
1992 - The Young Indiana Jones Chronicles
1993 - Jurassic Park
2004 - Spider-Man 2
2005 - King Kong
2006 - Pirates of the Caribbean: Dead Man's Chest
2007 - Pirates of the Caribbean: At World's End
2007 - The Golden Compass
2008 - The Spiderwick Chronicles
2008 - The Curious Case of Benjamin Button
read more "திரைப்பட விசுவல் எஃபெக்ட்ஸ்- 100 வருடங்கள்"

தொலைந்த சாஃப்ட்வேர் சீரியல் எண்களை மீட்க


பலவகையான மென்பொருட்களை நமது கணினியில் நிறுவுகிறோம்.அந்த மென்பொருட்களின் சீரியல் எண்ணை குறித்து கொள்ள மறந்து விட வாய்ப்புள்ளது.சில சமயம் அந்த மென்பொருட்களை மீண்டும் நிறுவும் போதோ அல்லது வேறு ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்திலோ மென்பொருளின் சாப்ட்வேர் சீரியல் எண் தேவைப்படுகிறது.

கணினியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து மென்பொருட்களின் சீரியல் எண்களையும் தெரிந்து கொள்ள இந்த எளிமையான 75KB அளவுள்ள இலவச மென்பொருள் உதவுகிறது.தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும்

http://www.freewarefiles.com/downloads_counter.php?programid=44343

read more "தொலைந்த சாஃப்ட்வேர் சீரியல் எண்களை மீட்க"

வீடியோ:நோக்கியாவின் லேப்டாப்

முன்னணி செல்பேசி நிறுவனமான நோக்கியா லேப்டாப் தயாரிப்பில் ஈடுபடப்போவதாக சில மாதங்களுக்கு முன்பே செய்திகள் வர ஆரம்பித்துவிட்டன.

நோக்கியா நிறுவனம் இன்று தனது சிறிய லேப்டாப்பை(Nokia Booklet 3G)அறிமுகப்படுத்தியது.10.1 இன்ச் அகல அதி துல்லிய(High Defninition) திரையுடன் வரும் இந்த லேப்டாப் 1.25 கிலோ எடை மட்டுமே கொண்டது.3G வயர்லெஸ் வசதி கொண்ட இந்த லேப்டாப் விண்டோஸ் இயங்குதளத்தை கொண்டிருக்கும்.HDMI வெளியீடு(அதிதுல்லிய தொலைக்காட்சி பெட்டியுடன் இணைக்க),உள்ளிணைந்த A-GPS(இருப்பிடங்களை அறிந்து கொள்ள)வசதிகளையும் கொண்ட இந்த லேப்டாப்பின் முக்கிய சிறப்பம்சம் 12 மணி நேரம் உபயோகிக்கும் அளவுக்கு ஆற்றல் தரும் இதன் பேட்டரி தான்.

இந்த லேப்டாப்பின் விலை மற்றும் மேலதிக விவரங்களை நோக்கியா நிறுவனம் செப்டம்பர் 2 ஆம் தேதி ஜெர்மனியில் நடைபெறும் Nokia World 2009 என்னும் கருத்தரங்கில் வெளியிடப்போகிறது.

read more "வீடியோ:நோக்கியாவின் லேப்டாப்"

ரயிலில் முத்தம்-இரானிய குறும்படம்

read more "ரயிலில் முத்தம்-இரானிய குறும்படம்"

ஹாரிஸ் ஜெயராஜின் "ஆதவன்" mp3 பாடல்கள் தரவிறக்க...

ஹாரிஸ் ஜெயராஜின் "ஆதவன்" mp3 பாடல்கள் தரவிறக்க கீழ்காணும் உரலை சொடுக்கவும்.

http://www.tamilcinepics.com/tamilmp3/index.php?p=2009/Aadhavan

http://tamilmp3songs.blogspot.com/2009/08/aadhavan-mp3-songs-free-download.html
read more "ஹாரிஸ் ஜெயராஜின் "ஆதவன்" mp3 பாடல்கள் தரவிறக்க..."

ஜிமெயிலின் உள்ளேயே விக்கிபீடியா தேடல்

ஜிமெயில் கணக்கை உபயோகித்து கொண்டிருக்கும் போது ஏதேனும் விவரங்களை விக்கிபீடியாவில் தேட நேர்ந்தால்,அந்த உலாவியின் விண்டோவை விட்டு வெளியே வந்து புதியதாக உலாவியின் விண்டோ திறந்து விக்கிபீடியா தளத்திற்கு செல்வதற்கு பதிலாக தற்போது கூகிளே ஜிமெயிலின் உள்ளே விக்கிபீடியா தேடலுக்கான இணைப்பை கொடுக்கிறது.ஜிமெயிலின் உள்ளே நுழைந்து மேலே Settings அருகே உள்ள பச்சை நிற ஆய்வு குடுவையை சொடுக்கவும்.தற்போது Gmail Labs உள்ளே வந்து விட்டீர்கள்.அங்கே Add any gadget by URL என்ற சிறப்பம்சத்தை Enable செய்யவும்.அந்த பக்கத்தின் கீழே உள்ள "Save Changes" சொடுக்கி மாற்றத்தை சேமிக்கவும்.


பின்னர் அதே கூகிள் Settings பகுதியில் Labs க்கு அருகிலுள்ள Gadgets என்னும் பகுதிக்கு வரவும். அங்கே Add a gadget by its URL என்னுமிடத்தில் கீழ்காணும் உரலை கொடுத்து Add பொத்தானை சொடுக்கவும்.

http://www.google.com/ig/modules/wikipedia.xml



இனி ஜிமெயில் பக்கத்தின் இடது புறம் விக்கிபீடியா தேடலுக்கான உள்ளிடும் பெட்டி காணப்படும்.ஜிமெயிலின் உள்ளே விக்கிபீடியா தேடலை உபயோகிக்கலாம்.
read more "ஜிமெயிலின் உள்ளேயே விக்கிபீடியா தேடல்"

யூடியுப் வீடியோவை mp3 ஆக மாற்ற

யூடியுப் தளத்தில் பார்க்கும் வீடியோவில் வரும் பாடலையோ அல்லது உரையாடைலையோ தனியே mp3 ஆக மாற்ற உதவுகிறது இந்த டிர்பி(Dirpy) தளம்.இது போல் வேறு சில தளங்களும்,மென்பொருட்களும் இருந்தாலும் இந்த டிர்பி தளம் மேலும் சில சிறப்பம்சங்களை கொண்டது.நமக்கு வேண்டிய பாடல்களை இதனுள்ளே அமைந்துள்ள யூடியுப் தேடு பொறியின் மூலம் தேடி தேர்ந்தெடுக்கலாம் அல்லது யூ டியுப் யூஆர்எல்(URL)தெரியும் பட்சத்தில் அதனை நேரடியாக உள்ளிடலாம்.


நமக்கு தேவையான நேர அளவை தேர்ந்தெடுத்து அந்த நேர இடைவெளியில், உதாரணத்திற்கு ஒரு வீடியோவின் இரண்டாம் நிமிடத்திலிருந்து மூன்றாம் நிமிடம் வரை வரும் இசையை மட்டும் அப்படியே பிரித்தெடுக்கலாம்.இவ்வாறு ஒலியை மட்டும் பிரித்து mp3ஃபைல் ஆக சேமித்து கொள்ளலாம்.சேமிக்கும் முன்னர் நமக்கு தேவையான பெயரை கொடுக்கலாம்.மேலும் ஒரு mp3 வடிவ பாடலுக்கு ID3 Tag Data கொடுக்கலாம்.இவை மட்டுமல்லாது அந்த வீடியோவையும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.தளத்திற்கு செல்ல

http://www.dirpy.com

read more "யூடியுப் வீடியோவை mp3 ஆக மாற்ற"

மனதை தொடும் தாய்லாந்து விளம்பரம்

தாய்லாந்தின் இந்த விளம்பரத்தை கூட மனதை தொடும் வடிவில் ஒரு குறும்படம் போல எடுத்துள்ளார்கள்.எளிதான ஒரு கான்செப்ட் ஐ கொண்டு சிறப்பான இசையுடன் வழங்கியுள்ளார்கள்.எந்த பொருளுக்கான விளம்பரம் இது என முன்பே தெரிந்தாலும் ஒரு குறும்படம் போலவே உணர வைக்கிறது.

read more "மனதை தொடும் தாய்லாந்து விளம்பரம்"

மைக்ரோசாப்ட்டின் Xbox வித்தை


வீடியோ விளையாட்டுகள் என்பது ஒன்றும் சின்ன பசங்க விஷயம் என்று ஒதுக்கி விடும் விஷயமில்லை. உலக அளவில் சென்ற 2008ஆம் ஆண்டு மொத்த வீடியோ விளையாட்டு பொருட்கள்,மென்பொருட்கள் விற்பனை மட்டும் 32 பில்லியன் டாலர்கள்.கணினியில் விளையாடப்படும் விளையாட்டுகளின்றி,வீடியோ விளையாட்டுகளுக்கேன்றே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கேமிங் கன்சோல்(Gaming Console)எனப்படும் விளையாட்டு இயக்கு பெட்டிகள் இப்போது உலகமெங்கும் சக்கை போடு போட்டுவருகின்றன.முதல் மூன்று இடத்தில் கடும் போட்டியுடன் இருப்பவை நின்டெண்டோவின்(Nintendo) விய்(Wii)மற்றும் DS,மைக்ரோசாப்ட்டின் Xbox மற்றும் சோனியின் ப்ளே ஸ்டேஷன் 3.

ஒருவருக்கொருவர் சளைக்காமல் மேம்படுத்தப்பட்ட விளையாட்டு இயக்கு பெட்டிகளையும் மென்பொருட்களையும் வெளியிட்டு வருகின்றனர்.இந்த வீடியோ பெட்டிகளை இயக்க ஒரு கட்டுப்பாட்டு பெட்டியும்(Gaming Controller)உண்டு.நின்டெண்டோவின் விய் ஒரு அருமையான விளையாட்டு சாதனம்.இதனுடன் இணைந்த சிறிய கட்டுப்பாட்டு பெட்டியை கையில் வைத்து கொண்டு எந்த திசையில் அசைத்தாலும் வீய் அதை உணர்ந்து கொள்ளும்.உதாரணத்திற்கு இந்த வீடியோ சாதனத்துடன் டென்னிஸ் விளையாடும் போது சிறிய கட்டுப்பாட்டு பெட்டியை உபயோகித்து பந்தை அடிப்பது போல் காற்றில் பாவனை செய்தாலே போதும்.இதே போல அதி துல்லிய வீடியோ விளையாட்டுகளை கையாள வல்லது சோனி ப்ளே ஸ்டேஷன்.

கடும் போட்டி கொடுத்த மைக்ரோசாப்ட் Xbox இப்போது தனது புதிய கண்டுபிடிப்பான Project Natal ஐ அடுத்த வருடம் வெளியிட இருக்கிறது.அசைவுகளை உணர்தலில் ஒரு படி மேலே சென்று,நமது கை,கால்கள் மற்றும்,உடலின் அசைவுகள்,மற்றும் குரலை கொண்டே Xbox சாதனத்துடன் விளையாட முடியும்.இதற்கென ஒரு விசேஷ சென்சார் கருவியை Xbox சாதனத்துடன் இணைத்தால் போதும்.இதுவே project Natal சென்சார் கருவி எனப்படுகிறது. திரைப்படங்களை,கையை காற்றில் அசைத்து,தேர்வு செய்து பார்க்கலாம்.மேலும் விவரங்களுக்கு இந்த வீடியோவை பாருங்கள்.

read more "மைக்ரோசாப்ட்டின் Xbox வித்தை"

உலகின் முதல் ப்ரொஜெக்டர் கேமரா


கையடக்க டிஜிட்டல் கேமரா(Compact Digital Camera)சந்தையில் பெரும் போட்டியே நிலவிக்கொண்டுள்ளது.கடந்த பத்து வருடங்களாக கையடக்க டிஜிட்டல் கேமரா சந்தையில் நிக்கான்(Nikon),கேனான்(Canon)மற்றும் சோனி(Sony)நிறுவனங்களே முன்னிலை வகிக்கின்றன.தொழில்நுட்பம் முன்னேற ஒவ்வொரு நிறுவனமும் மெகா பிக்சல் அளவுகளை அதிகரித்து 3,4 மெகா பிக்சல்களில்(Mega Pixels)ஆரம்பித்து இன்று 12 மெகா பிக்சல்கள் வரை கையடக்க டிஜிட்டல் கேமராக்கள் சந்தையில் கிடைக்கின்றன.

இந்த நிறுவனங்கள் மக்களை கவர வீடியோக்களையும் எடுக்கும் திறனுள்ள,முகங்களை அறிந்து கொள்ளும் கேமரா,தொடு திரை(Touch Screen)வசதியுள்ள கேமரா,சிரிப்பை அறிந்து கொள்ளும் கேமரா,அதி துல்லிய வீடியோ எடுக்கும் கேமரா,3D முப்பரிமாணத்தில் படமெடுக்கும் டிஜிட்டல் கேமரா என ஏதேனும் புதிய கண்டுபிடிப்புகளை போட்டி போட்டு வெளியிடுகிறார்கள்.

இன்று நிக்கான் நிறுவனம் உலகின் முதல் ப்ரொஜெக்டர்(Projector)கேமராவான
COOLPIX S1000pj ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.12 மெகா பிக்சல்கள் அளவில் படமெடுக்கும் இந்த கேமராவுடன் சிறிய ப்ரொஜெக்டரும் இணைந்துள்ளது. படச்சுருள் கேமரா இருந்த காலத்தில் படமெடுத்து பின்னர் இருட்டறையில் நெகடிவ் படச்சுருளை மேம்படுத்தி அச்சடிக்கப்பட்ட பின்னரே பார்க்கமுடியும்.டிஜிட்டல் கேமராவில் இந்த நிலை மாறி படமெடுத்தவுடன் LCD பேனலில் பார்க்க முடிந்தது.

இப்போது இந்த கேமராவில் புகைப்படத்தையோ அல்லது வீடியோவையோ படமெடுத்தவுடன் ப்ரொஜெக்டர் மூலமாக சுவற்றிலோ அல்லது சமதள பரப்பிலோ 5 இன்ச் முதல் 40 இன்ச் அளவு வரை திரையிட்டு பார்க்க முடியும்.நண்பர்களோடு பொது நிகழ்ச்சிகள்,விருந்து முதலானவற்றில் கலந்து கொள்ளும் போது படமெடுத்து உடனுக்குடன் திரையிட்டு பார்க்கலாம்.

இது மட்டுமன்றி Image stabilization என்னும் படமெடுக்கும் போது கைகள் அசைந்தாலும் துல்லிய படமெடுத்தல்,Skin softening,5X ஜூம்(Zoom),USB இணைப்பு என பல்வேறு வசதிகளும் உள்ளன.

read more "உலகின் முதல் ப்ரொஜெக்டர் கேமரா"

PDF ஃபைல்களை வெட்ட,ஒட்ட,பூட்ட ஒரு இலவச மென்பொருள்


அதிக அளவில் PDF கோப்புகளை(Files)உபயோகிப்பவர்களுக்கு இது ஒரு சிறப்பான மென்பொருள். இந்த மென்பொருள் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட PDF கோப்புகளை இணைக்கலாம்.ஒரு பெரிய PDF கோப்பை வேண்டிய அளவு வெட்டி பிரித்து கொள்ளலாம்.தேவைப்படாத பக்கங்களை வெட்டிவிடலாம்.


இவையல்லாது PDF கோப்பின் ஒவ்வொரு பக்கத்திலும் ஏதேனும் வார்த்தைகளையோ,பெயரையோ அல்லது ஒரு சிறிய படத்தையோ அச்சடிக்கலாம்.


மேலும் முக்கிய தகவல்களை கொண்ட PDF கோப்புகளை கடவுச்சொல்(Password)கொடுத்து பூட்டலாம்.ஒரு பெரிய PDF கோப்பில் நம் வசதிக்கு தகுந்தவாறு ஒரே பக்கத்தில் 2,3 அல்லது 4 பக்கங்களை கொண்டு வரலாம்.தரவிறக்க...

http://sheelapps.com/index.php?p=PDFTools.HomePage&action=view

read more "PDF ஃபைல்களை வெட்ட,ஒட்ட,பூட்ட ஒரு இலவச மென்பொருள்"

வாவ்! இந்த பெண் வரைவது என்ன?

நடனத்துடன் அனாயாசமாக இந்த பெண் வரைவது என்ன என்பதை உங்களால் யூகிக்கமுடிகிறதா?

read more "வாவ்! இந்த பெண் வரைவது என்ன?"